Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருடன் கூட்டணி? இன்று அறிவிக்கும் ராமதாஸ்! வட மாவட்ட அரசியலையே புரட்டிப் போடப்போகும் மேஜர் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகள் சூடுபிடித்து வருகின்றன. பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையே வெடித்த மோதல் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில் பாமகவுக்கும் அதன் சின்னத்திற்கும் யார் உரிமையானவர் என்ற பிரச்சனை நீண்டு வருகிறது.

Ramadoss pmk dmk

அதிமுக கூட்டணியில் அன்புமணி

அன்புமணி தரப்பு பாமக, பாஜக - அதிமுகவின் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் ராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், விசிக நிலைப்பாடு காரணமாக திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணைய முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "நமக்கான தேர்தல் வாகனம் தயாராகிவிட்டது. பிப்ரவரி 28 ஆம் தேதி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" எனறு ராமதாஸ் கூறி இருந்தார்.

இந்நிலையில், தைலாபுரத்தில் இன்று பாமக மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வட மாவட்டங்களில் பாமக வாக்கு வங்கி பெரியது என்ற சூழலில், ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கு விவகாரம்

இதற்கிடையே, தேர்தல் ஆணையம் தரப்பில் கட்சியின் தலைவர் அன்புமணிதான் என்றும், மாம்பழச் சின்னம் அன்புமணிக்கே வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அன்புமணிக்கு வழங்கிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த கடிதத்தை மீண்டும் தனக்கு வழங்க வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு வாபஸ்

இதையடுத்து, பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராமதாஸ் தரப்பு கோரிக்கைக்கு பதில் அளிக்க, அன்புமணி தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே இந்த வழக்கில் அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டில் நேற்று வாபஸ் பெற்றது ராமதாஸ் தரப்பு. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெற ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், வழக்கை திரும்பப்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராமதாஸ் மறுப்பு

ராமதாஸ் வழக்கை வாபஸ் பெற்றதால், அன்புமணியுடன் சமரசம் ஆகிவிட்டதாக தகவல்கள் பரபரத்தன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், வழக்கை வாபஸ் பெறுவதாக ஏற்கனவே கூறி கடிதம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிமையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 9.3.2026-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்தால் அன்றே உத்தரவு அளிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இதற்கு அன்புமணி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கூற வாய்ப்புள்ளதால், எந்த நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இல்லை என்பதை தெரிவிக்கவே இந்த மனு திரும்பப் பெறப்பட்டது. சிவில் நீதிமன்றமே யார் பாமக தலைவர் என்பதை தீர்மானிக்க உள்ளது. என் கவனத்திற்கு வராமல் வழக்கறிஞர் அருள் எவ்விதமான கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டு சிலர் என்னையும், எனது தரப்பு வழக்கறிஞர் அருளையும் சமூகவலைதளங்களில் கொச்சைபடுத்தி வருகின்றனர். எனவே கட்சியினர் யாரும் குழப்பமடைய வேண்டாம். தன்னுடன் உள்ள ஒரு சில அப்பாவி தொண்டர்களை தக்க வைத்துக்கொள்ளவே இத்தகைய பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+