பாஜக கூட்டணி ஓகே.. ஆனா கூட்டணி ஆட்சிக்கு நோ.. அதிமுக பதறியடித்து எதிர்ப்பது ஏன்? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அதிமுக தலைவர்கள் மாறி மாறி கூறி வருகின்றனர். இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், நாங்கள் பாஜகவுடன் அமைக்கப்போவது கூட்டணி அரசு அல்ல. கூட்டணிதான். கூட்டணி அரசு என அமித்ஷா சொல்லவே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பாஜகவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். டெல்லிக்கு பிரதமர் மோடி.. தமிழ்நாட்டுக்கு நான்" என அமித்ஷா தெளிவாக கூறினார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம், என்று எடப்பாடி கூறியது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Alliance ok but power sharing not ok Why AIADMK does not want to include BJP in governance

தம்பிதுரை பேட்டி

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் அண்ணா திமுக, தனித்துதான் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையிலும் கூட அதிமுக தனித்துதான் ஆட்சியை அமைக்கும் என்றும் தம்பிதுரையும் விளக்கம் அளித்துள்ளார்.

காரணங்கள் என்ன?

பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம் என்று அதிமுக தலைவர்கள் மாறி மாறி கூறி வருகின்றனர். இதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

1. பாஜகவுடன் அதிகாரத்தை பகிர்ந்தால்.. பாஜகவின் முக்கிய தலைவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டி இருக்கும்.

2. பாஜக கூட்டணி ஆட்சி இருக்கும் மாநிலங்களில்.. பாஜகவே முக்கியமான துறைகளை எடுத்துக்கொள்வது வழக்கம். அதாவது போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறையை எடுத்துக்கொள்வது வழக்கம்.

3. பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தால் சில சட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

4. பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பலம் பறிக்கப்படும் என்று.. கட்சி நிர்மூலம் ஆகும் என்று அதிமுகவினர் அஞ்சுகின்றனர்.

5. பாஜக தேசிய அளவில் அதிமுகவுடன் பல முறை கூட்டணி அமைத்து இருந்தாலும்.. அதிமுக தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளை தருவது இல்லை. அப்படி இருக்க மாநிலத்தில் அதிகாரம் கேட்பது சரியில்லை என்று அதிமுகவினர் நினைக்கின்றனர்.

6. அதிமுகதான் கூட்டணியின் தலைமை. அவர்கள்தான் இதை பற்றி முடிவு எடுக்கலாம். பாஜக அதிகார பகிர்வு கேட்க கூடாது என்று அதிமுகவினர் நினைக்கின்றனர்.

7. திமுக காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி செய்யாத போது அதிமுக மட்டும் ஏன் பாஜகவிற்கு கூட்டணியில் ஆட்சி பகிர்வு தர வேண்டும் என்று அதிமுகவினர் கருதுகின்றனர் .

8. பாஜகவுடன் அதிகார பகிர்வு என்று கூறினால் அது வெளியேறிய அதிமுக தலைகளுக்கு சாதகம் ஆகும். அதாவது ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணி வழியாக அமைச்சர்கள் ஆகலாம். இது அவர்கள் பலம் அடைய வழி வகுக்கும். இது எடப்பாடிக்கு சிக்கல் ஆகும்.

9. அதோடு கூட்டணியினர் அமைச்சர் ஆனால்.. அது அதிமுகவில் பலர் பவரை இழக்க காரணமாக அமையும். இதை அதிமுகவில் மூத்த தலைகள் விரும்ப மாட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+