காக்காதான் உட்காரும்.. கொடி வைக்க கூடாது.. ஒருவழியாக ஜாமீன் பெற்ற அமர் பிரசாத்.. நீதிமன்றம் நறுக்
சென்னை: பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி மேல்முறையீடு செய்த நிலையில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை பனையூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதுக்கான காரணம்: இவரின் கைதுக்கான காரணத்தை தாம்பரம் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தாம்பரம் மாநகரக் காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம், T20 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக பிஜேபி தலைவர் திரு. அண்ணாமலை வீடு அமைந்துள்ளது.
20.10.2023 ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு முன்பு பிஜேபி தலைவர் திரு. அண்ணாமலை வீட்டு காம்பவுண்ட் சுவர் முன்பாக பொது இடத்தில் சுமார் 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் ஒன்று முன் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறாகவும், உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான வகையில் அமைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேற்படிகொடி கம்பத்தை சென்னை பெருநகர மாநகராட்சியினரும், போலீசாரும் அகற்ற முடிவு செய்து அதனை பிஜேபி கட்சியினருக்கு தெரியபடுத்தி இரவு 8 மணிக்கு போலீசார் உதவியுடன் கொடிக்கம்பத்தை அகற்ற முற்படும் போது பிஜேபி துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணா செய்தவர்களை பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது T20 கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு 5 உட்படுத்தப்பட்டனர், என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
புழல் சிறை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தை அகற்றிய காவல்துறையினர் மீது தாக்குதல், JCB இயந்திரத்தின் கண்ணாடியை உடைத்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு அரசு மற்றும் ஆளும் கட்சியின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், தன் மீது பொய் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன்..
போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால், அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளேன் என்று இவர் மனுதாக்கல்செய்துள்ளார் . இவர் ஒரே 200 பேர் பயன்படுத்தும் டாய்லெட்டை பயன்படுத்துவதாகவும், ஜெயிலில் 200 பேர் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி இருந்தார்.
ஜாமீன்: ஏற்கனவே இவரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளருக்கு 712,000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
55 அடி உயர கொடி கம்பம் வைப்பது முட்டாள் தனமான' முடிவு; காக்கா குருவி தான் உட்கார கொடி கம்பம் பயன்படும்; மக்களின் கண்ணுக்கு கொடி தெரியவே தெரியாது. மாநகராட்சிக்கு சொந்தமான சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications