Mass Layoffs: 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ‛அமேசான்' நிறுவனம்.. கலக்கத்தில் பணியாளர்கள்
சென்னை: ஐடி உள்பட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வரும் ‛அமேசான்' நிறுவனம் அடுத்த வாரம் முதல் 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. மொத்தம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக அமேசான் இந்த நடவடிக்கையை எடுப்பதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஏராளமான ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மைக்ரோசாப்ட், டிசிஎஸ், காக்னிசண்ட் உள்பட இன்னும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இந்த லிஸ்ட்டில் அமேசான் நிறுவனமும் இணைந்தது.

உலகில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று அமேசான். ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், ஏஐ உள்பட பல்வேறு சேவைகளை அமேசான் வழங்கி வருகிறது. அமேசான் நிறுவனம் ஏஐ, ரோபாக்களை பணிக்கு பயன்படுத்துவதை அதிகரித்து வருகிறது.
30 ஆயிரம் பேர் டார்க்கெட்
இந்நிலையில் தான் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக உலகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 28 ம் தேதி முதல் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. அனைவருக்கும் இ-மெயில், போன்கால் மற்றும் செல்போன் மெசேஜ் வழியாக பணி நீக்கம் குறித்த அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.
2வது கட்டமாக 16 ஆயிரம் பேர்
இதன் அடுத்தக்கட்டமாக 16 ஆயிரம் ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த நடவடிக்கையை அடுத்த வாரம் முதல் அமேசான் நிறுவனம் தொடங்க உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி 27 முதல் பணி நீக்கம்
அதன்படி ஜனவரி 27 ம் தேதி முதல் 2வது கட்டமாக 16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கும் நடவடிக்கையை அமேசான் தொடங்க உள்ளது. அமேசானின் தற்போதைய பணி நீக்கத்துக்கும் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக பலரும் பிளைண்ட் மற்றும் ரெடிட் வலைதளங்களில் பதிவுகள் செய்து வருகின்றனர்.
சூசகமாக தெரிவித்த மேனேஜர்கள்
மேலும், பலரும் ஜனவரி 27 ம் தேதி நடக்கும் பெரிய அளவிலான பணி நீக்கம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி, அமேசான் ஊழியர்கள் என்று கூறும் பலரும் தங்களின் மேனேஜர்கள் உள்பட பலரும் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறி புலம்பி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் அமேசான் நிறுவனம் 14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இப்போது மீண்டும் 16 ஆயிரம் பேரை நீக்கும் பட்சத்தில் மொத்த பணி நீக்கம் 30 ஆயிரமாக அதிகரிக்கும்.
இது சாத்தியமாகும் பட்சத்தில் கடந்த 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும். ஏனென்றால் கடந்த 2023ம் ஆண்டில் 27 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications