அமித் ஷா வருகை எதிரொலி.. இன்று தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! ரோந்து பணிகள் தீவிரம்
சென்னை: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு இன்று தனுஷ்கோடிக்குச் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போது இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். நேற்றைய தினம் அமித் ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையில் பாத யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் அண்ணாமலை இந்த பாத யாத்திரையை நடத்துகிறார். இந்த மாத யாத்திரை பல கட்டங்களாக 6 மாதங்களுக்கு நடக்கிறது.

இந்த பாத யாத்திரையைத் தான் அமித் ஷா நேரில் வந்து தொடங்கி வைத்தார். இதற்காக நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, திமுகவை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு திமுக அரசு தான் என்று சாடிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியை ஏன் அமைச்சரவையில் விட்டு நீக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்காக இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். நேற்றிரவு அங்குள்ள ஹோட்டலில் தங்கிய இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் சுவாமி தரிசனம் செய்தார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அமித் ஷா வருகையை முன்னிட்டு தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா வருகையையொட்டி பாக் ஜலந்த், மன்னார் வளைகுடா பகுதிகளில் கடலோர காவல் படை ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலையில் சுவாமி தரிசனத்தை முடித்த அமித் ஷா காலை 10.30 மணியளவில் அங்குள்ள பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டிற்குச் செல்கிறார். தொடர்ந்து காலை 11 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் குறித்த புத்தகத்தை வெளியிடும் அவர், பிற்பகல் 12.05 மணிக்கு பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார்.
பின்னர், பிற்பகல் 12.40 மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்துக்குச் செல்லும் அவர், பிற்பகல் 1.20 மணிக்கு மண்டபம் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications