நெருங்கிட்டாங்களே? மாயமான நீர்மூழ்கி கப்பல்! கடலுக்கடியில் கிடைத்த முக்கிய தடயம்! தீவிரமாகும் தேடல்
சென்னை: மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க 5 கோடீஸ்வரர்களுடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமாகி 4 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அதுபற்றிய எந்த தகவலும் வெளியாகல் இருந்தது. இந்நிலையில் தான் கடலுக்கடியில் முக்கிய தடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
1912 காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய நீராவி என்ஜின் கப்பலாக டைட்டானிக் இருந்தது. இது அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் டிரான்ஸ் அட்லாண்டிக் பயணத்தின்போது பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் 1500க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கனடாவின் நியூ பவுண்ட்லாந்திலிருந்து 400 மைல் தொலைவில் கடலுக்கடியில் உள்ளது.
இந்த டைட்டானிக் பாகங்களை பார்க்க ‛தி ஓசன் கேட்' என்ற நிறுவனத்தின் ‛டைட்டன்' நீர்மூழ்கி கப்பலில் 5 கோடீஸ்வரர்கள் கடலுக்கடியில் சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் சென்ற நிலையில் நீர்மூழ்கி கப்பல் அடுத்த 2 மணிநேரத்தில் தொலை தொடர்பை இழந்தது.

இதனால் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த பிரிட்டன் தொழிலதிபர்களான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), ஷாஜதா தாவூத் (48) அவரது மகன் சுலைமான் (19), பிரஞ்ச் ஆய்வாளர் பால் ஹென்றாி நர்கோலெட் (77) உள்பட 5 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்பு பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஆக்சிஜன் அளவு இன்றோடு காலியாகிவிட்டது. இருப்பினும் நீர்மூழ்கி கப்பல் மட்டும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இருப்பினும் தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல் படை மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் மீட்பு பணி மிகவும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் சோனார் மற்றும் ரிமோட் வகையிலான கருவிகள் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தான் தற்போது முக்கிய தடயம் கிடைத்துள்ளது. அதாவது ரிமோட் தொழில்நுட்பத்தினம் மூலம் ஆர்ஓவி தேடும் பணியில் தான் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலின் அருகே குப்பைகள் குவிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கப்பலின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனை அமெரிக்க கடலோர காவல்படையினர் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள், ‛‛டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலை ஆர்ஓவி மூலம் தேடும் பணி தொடங்கியது. அப்போது கடலுக்குள் Debris field கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்'' என அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த எந்த கப்பலின் பாகங்கள் என்பது பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications