கூட்டணியை விடுங்க.. அமித் ஷா- எடப்பாடி பேசிய அடிப்படை விஷயமே இதுதான்.. சபதம் நம்பர் 1!
சென்னை: நேற்று டெல்லியில் நடந்த சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி - பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையில் அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒரு சபதம் போன்ற ஒரு விஷயம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.

கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசனை
இதில் சில கட்டுப்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர். ஆனால் அவர் அண்ணாமலை பதவியை மாற்ற வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைக்க முடியாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று செக் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே இன்று கூட்டணியை முடிவு செய்துள்ளனர். ஆனால் இதை சென்னையில்தான் அறிவிப்பார்கள். அதாவது சென்னையில் அண்ணாமலையை வைத்துக்கொண்டு அரிக்க வேண்டிய சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு கூட்டணி பற்றிய அறிவிப்பு இருக்காது.. விரைவில் இருக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
முக்கிய விஷயம் என்ன
இந்த ஆலோசனையில் கூட்டணி தாண்டி வேறு சில விஷயங்களும் ஆலோசனை செய்யப்பட்டது. அதிலும் முக்கியமாக ஒரு சபதம் போன்ற ஒரு விஷயம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நமக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில பதவிகள், சில தலைவர்கள் தொடர்பாக நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஆனால் அதெல்லாம் நமது கூட்டணியில் எதிராக வரக்கூடாது. நம்முடைய இலக்கு.. சபதம் ஒன்றாகவே இருக்க வேண்டும். நமது கூட்டணியின் நோக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும். அது 2026ல் திமுகவை வீழ்த்துவது. அதுதான் நமது நோக்கம் மற்றும் கூட்டணியின் அடிப்படையாக இருக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது திமுக ஆட்சியை 2026 சட்டமன்ற தேர்தலில் அகற்றுவதுதான் நமது குறிக்கோள்.
அதற்கு ஏற்றபடி கூட்டணி அமைக்க வேண்டும் என்று இதில் பேசியதாக தெரிகிறது. இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை கூட்டணியில் பெற உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications