அமித் ஷாவின் ஆடு புலி ஆட்டம்? ஆளுநரை வைத்து ‘மேலிடம்’ போடும் ஸ்கெட்ச்! தப்பிப்பாரா ’தளபதி’ விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு இருந்தது. திமுக ஆட்சியில் இருந்து ஆற்றப்பட்டாலும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் எப்படியாவது ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான் 'மேலிடம்' ஆளுநரை வைத்து விளையாடுகிறது என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

தமிழக அரசியல் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைப்பதற்கான மேஜிக் எண் கிடைக்காமல் சிக்கித் தவிக்கிறது.

Amit Shah Vijay tvk

இந்த சூழலில், ஆளுநரை வைத்து டெல்லி மேலிடம் ஆட்டம் ஆடுகிறதா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. 2026 தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய அரசியல் இலக்காக இருந்தது.

தவெக ஆட்சி

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உருவான அரசியல் சூழல், டெல்லி தலைமையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக சொல்லப்படுகிறது. காரணம், திமுக ஆட்சியை இழந்தாலும், பாஜக எதிர்பார்த்த கூட்டணி கணக்கு நடக்காமல், விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டது. இதனால், எப்படியாவது புதிய ஆட்சியில் தங்களுக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் சில அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றன என்று தவெக தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழக சட்டசபை

குறிப்பாக, ஆளுநரின் நடவடிக்கைகள் தற்போது விவாதத்துக்குள்ளாக்கியுள்ளது. 234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டசபையில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் தவெக வசம் 108 இடங்களே உள்ளன. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தாலும், எண்ணிக்கை 113 ஆக மட்டுமே உயர்கிறது. இதையடுத்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பெரும்பான்மை

விசிகவின் 2 உறுப்பினர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தாலும், சபநாயகர் பதவி காரணமாக இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு தேவைப்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அதோடு சபாநாயகர் வாக்களிக்க முடியாத சூழலும் உள்ளதை கவனிக்க வேண்டும். இதனால் பெரும்பான்மை நிரூபிப்பது இன்னும் சிக்கலாகியுள்ளது.

ஆளுநர்

இந்த நிலையில்தான், காங்கிரஸ் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் உடனடியாக அழைப்பு வழங்கப்படவில்லை. "முழுமையான பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பிறகு வாருங்கள்" என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே தற்போது அரசியல் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது. ஏனெனில், இந்திய அரசியலில் பலமுறை தனிப்பெரும் கட்சியை முதலில் ஆட்சியமைக்க அழைத்து, பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கிய சம்பவங்கள் நடந்துள்ளன.

பாஜக அழுத்தம்

ஆனால் இங்கு அதே நடைமுறை பின்பற்றப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தவெக வட்டாரங்களில், "இது வெறும் அரசியலமைப்பு நடைமுறை மட்டுமல்ல; பின்னால் பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது" என்ற கருத்து நிலவுகிறது. குறிப்பாக, பாஜக மேலிடம் நேரடியாக அழுத்தம் கொடுக்கிறதா என்ற சந்தேகத்தையும் அவர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.

தவெக தொண்டர்கள்

மறுபக்கம், பாஜக தரப்பில் இதற்கு எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. ஆனால் அரசியல் விமர்சகர்கள் சிலர், "தமிழகத்தில் நேரடியாக வளர முடியாத சூழலில், கூட்டணி மூலம் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வது இயல்பானது" என்று கூறுகின்றனர். இந்த சூழலில் விஜய் தேவையான ஆதரவை திரட்டி முதல்வராக பதவியேற்பாரா? இந்த அரசியல் அழுத்தங்களை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார்? என தவெக தொண்டர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+