Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் பதவிக்கு சிக்கல்.. 140 + 60 + அண்ணாமலை.. அமித் ஷா சொன்ன வெற்றி பார்முலா.. எடப்பாடி ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்மையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வியூகக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கான விரிவான வெற்றிப் பார்முலாவை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியை தீவிரமாக எதிர்கொள்ளும் பாஜகவின் திட்டம் இது என்று கூறப்படுகிறது.

பாஜக வட்டார தகவல்களின்படி, அமித் ஷா ஒரு தெளிவான தொகுதிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு பார்முலாவை பரிந்துரைத்தார். இது திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்து, கூட்டணிக்குள் உள் போட்டியைக் குறைக்க வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிமுக 140 தொகுதிகளில் போட்டியிட்டு, பிரதான கட்சியாக கூட்டணியில் பாஜக 60 தொகுதிகளில் களமிறங்கும்; இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) தலைமையிலான அணிக்கான இடங்களும் அடங்கும்.

tamilnadu Election 2026 2026 tamil nadu amit shah

பாஜக கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகள்

வட தமிழ்நாட்டில் சாதி செல்வாக்கு மிக்க பாட்டாளி மக்கள் கட்சி (பாமக - இரண்டு பிரிவும் சேர்ந்து வர வேண்டும்) 20 தொகுதிகளைப் பெறும். தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) 4 தொகுதிகளிலும் போட்டியிடும். மற்ற NDA பங்காளிகள் பாஜக, அதிமுக டிக்கெட்டுகளில் இணைக்கப்பட்டு, வாக்கு பிளவு தவிர்க்கப்படும்.

தலைமைத்துவ ஏற்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. முதல்வர் பதவி அதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டு, தொண்டர்களின் அரசியல் முன்னுரிமைக் கவலைகள் தீர்க்கப்படும். அதிமுகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் மட்டும் முதல்வர் பதவியில் மாற்றம் வரும். மற்றபடி துணை முதல்வர் பதவிகள் பாஜக, பாமகவிற்குப் பகிரப்படும்; ஆட்சி நிர்வாகத்தில் அவர்களுக்குப் பங்கு உண்டு. அமைச்சரவைப் பதவிகள் அனைத்து NDA பங்காளிகளுக்கும் சமநிலைக்காக விநியோகிக்கப்படும்.

எடப்பாடி - அமித் ஷா பார்முலா

இந்த ஃபார்முலாவின் முக்கிய அரசியல் நிபந்தனை.. கே. அண்ணாமலை மாநிலம் முழுவதும் பாஜக பிரச்சாரத்திற்குத் தலைமை ஏற்க வேண்டும் என்பதே என்கிறார்கள். அவர் வலிமையான, நிலையான முகமாகத் திகழ்ந்து, கட்சியின் அடிமட்ட கட்டமைப்பிற்குப் புத்துயிர் அளிப்பார். அதாவது அதிமுக மெஜாரிட்டி பெறாமல் போனால் அண்ணாமலைக்கு அப்போது முன்னுரிமை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் திருச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணியுடன் மூடிய அறைப் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு கூட்டணித் தலைவர்களுக்கு இடையேயான வழக்கமான ஒன்று என பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இந்த திங்கள்கிழமை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.

அமித் ஷா திட்டம்

அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற 'தமிழகம் தலைநிமிர தமிழர் பயணம்' நிறைவு விழாவில் பங்கேற்றார். ஞாயிறன்று மாலையும் அமித் ஷாவும், வேலுமணியும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவுறுத்தலால் வேலுமணி அமித் ஷாவை சந்தித்தார் என அதிமுக தலைவர்கள் குறிப்பிட்டனர். அமித்ஷாவுடனான சந்திப்புக்குப்பின், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடனும் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

திங்கள்கிழமை காலை திருச்சியில், பாஜக மகிளா மோர்ச்சா ஏற்பாடு செய்திருந்த 'நம்ம ஊரு மோடி பொங்கல்' கொண்டாட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். கட்சியின் கலாச்சார திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் 1,008 பானைகளில் பொங்கலிடப்பட்டது.

இந்த நிகழ்வில் அமித் ஷா உரையாற்றவோ, பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவோ இல்லை. இதுகுறித்து செய்தியாளர் கேள்விக்கு, மேடையில் இருந்தவர்களுக்கு அவர் இந்தியில் வாழ்த்து தெரிவித்தார் என்று தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார். வேலுமணி சந்திப்பு வழக்கமானது என்பதால் அதில் எந்த அசாதாரணமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

அமித் ஷா தீவிரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தமிழகத்திற்கான பாஜகவின் வியூகம் தொடர்பாக, அவர் வாரத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வந்து தங்குவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு ஒன்றைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் ஒரு பெரிய குடியிருப்பு

அமித் ஷா தங்குவதற்கு வசதியான ஒரு இல்லத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. கிண்டி, அடையார் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மயிலாப்பூர், நங்கநல்லூர் பகுதிகளிலும் அவருக்கான தற்காலிகக் குடியிருப்பு தேர்வுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சில பாஜக மூத்த தலைவர்கள் நேரடியாக இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடைசியில் தீவிர சோதனைக்கு பின் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருக்கும் பனையூர் நீலாங்கரை வீட்டிற்கு அருகிலேயே அமித் ஷா வீடு பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+