அண்ணாமலை பற்றி பிஎல் சந்தோஷிடம்.. புகார் தந்த நயினார்.. கிளம்பி வரும் அமித் ஷா.. சூடு பிடித்த கேம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 22 அன்று சென்னையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜகவின் பூத் கமிட்டி தொடர்பான முக்கிய விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் பூத் முகவர்களில் 50% பேர் போலியானவர்கள் என்றும், இல்லாத பெயர்களை இருப்பதாகக் கணக்கு காட்டியதாகவும், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷிடம் புகார் தெரிவித்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

annamalai nainar nagendran bjp

பாஜகவின் பூத் முகவர் விவகாரம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வழக்கமாக, புதிய தலைவர்கள் தங்களது நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த பட்டியலில் நடிகை குஷ்பு மாநில துணைத் தலைவராகவும், சூர்யா இளைஞரணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், எஸ்.ஆர். சேகர் மாநிலப் பொருளாளராகவும், கே.டி. ராகவன் மாநிலப் பிரிவு அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் மோதல்

இதன் மூலம் தமிழக பாஜகவில் மீண்டும் கே.டி. ராகவனுக்குப் பதவி கிடைத்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாமலை இருந்தவரை இவர் ஓரங்கட்டப்பட்டு இருந்தார்; இவருக்குப் பதவி எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் என்றும் கூட கூறப்பட்டது.

அண்ணாமலை ஓரங்கட்டப்பட்ட நிலையில், கே.டி. ராகவனுக்குப் பதவி கிடைத்துள்ளது. அதேபோல், அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்பட்ட வினோஜ் பி. செல்வம் வகித்து வந்த மாநிலச் செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு அண்ணாமலைக்கு எதிராக இருந்த பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை - அமித் ஷா விசாரணை

அண்ணாமலை இருந்த காலத்தில் குஷ்புவும் கூட மாநிலப் பதவிகளில் பெரிய பொறுப்புகளைப் பெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டார். இத்தகைய சூழலில், நயினார் இவர்களுக்குத் தேடித் தேடிப் பதவி கொடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அண்ணாமலைக்காகப் பணியாற்றிய மற்றும் கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை நீக்க நயினார் திட்டமிட்டுள்ளார். மேலும், சாதி ரீதியாக அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் பதவிகளை வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

அண்ணாமலை பதவி அமித் ஷா

முந்தைய தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்களையும் மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ரவுடிகள் சிலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவர்களை நீக்கவும் நயினார் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் நீண்டகால திட்டமான பூத் கமிட்டி அமைக்கும் பணி, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, 2026 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.

இதற்காக, கட்சியின் நிர்வாகிகள் குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள் குழு விரைவில் மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலேயே பாஜக பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தங்கினார். அப்போதுதான், அண்ணாமலை 50% போலியான பூத் கமிட்டி உறுப்பினர்களைக் கணக்கு காட்டியதாக பி.எல். சந்தோஷிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+