கிடைத்த சான்ஸையும் இழந்தது தேமுதிக.. கதவை இழுத்து மூடியது அமமுக.. மீண்டும் தனி மரம்!

தேமுதிக - அதிமுக கூட்டணி முடிவாகும் என்று தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக - தேமுதிக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது அமமுக வெளியிட்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் பிறகு கூட்டணி இல்லை என்று உறுதியாகி விட்டது. இதனால் தேமுதிக தனித்து விடப்பட்டு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி உடனேயே அமமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றார்போல, சூட்டோடு சூட்டாக அமமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், மாணிக்க ராஜா ஆகியோருடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, இளங்கோவன் பேசியதாக தகவல்களும் வெளியாகின.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக டிடிவி தினகரனும் அடிக்கடி செய்தியாளர்களிடம் சொல்லி கொண்டே இருந்தார்.. ஆனால், 2 நாட்களாக உடன்பாடு ஏற்படவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

அதனால், தேமுதிக திடீரென திமுக பக்கம் சென்றுவிடக்கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்தபடியே இருந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று இன்று காலையில் தினகரன் மறுபடியும் கூறியிருந்தார். அநேகமாக கூட்டணி முடிவாகிவிட்டது என்றே சொன்னார்கள். 32 சீட்வரை தேமுதிகவுக்கு அமமுக கூட்டணயில் இருந்து தரப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

 தேர்தல்

தேர்தல்

சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்று பிரேமலதா சொல்லி இருந்த நிலையில், அதிமுகவில் இருந்தும் விலகிய நிலையில், நிஜமாகவே தனியாகத்தான் தேமுதிக போட்டியிட போகிறதோ என்ற டவுட் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால், அமமுகவுடன் இணைந்தே தேர்தலை சந்திப்பது என்பது முடிவாகி உள்ளதாக தெரிந்ததால் தொண்டர்கள் சற்று ஆறுதலடைந்தனர்.

 ராஜ்ய சபா

ராஜ்ய சபா

முதலில் பிரேமலதா கேட்டது 41 சீட்தான்.. 41-க்கு கீழே இறங்கி வராமல் இருந்த நிலையில், அமமுகவில் 32 சீட் ஒதுக்கப்படுவது பெரிய விஷயமே.. ஆனால், ராஜ்ய சபா சட் அதிமுகவில் தருவதாக உறுதி தந்திருந்த நிலையில், அமமுகவில் அப்படி ஒரு விஷயமாக பேச்சுவார்த்தை நடந்ததா அல்லது அதற்கு மாற்றாக வேறு ஏதாவது பேச்சு நடந்ததா என்றும் தெரியவில்லை.

 தேமுதிக

தேமுதிக

ஆனால் தற்போது நிலைமை மோசமாகி விட்டது. அதாவது அமமுக இன்று 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதையும் சேர்த்துப் பார்த்தால் 195 தொகுதிகளுக்கு அது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மிச்சம் இருப்பது 38 தொகுதிகள்தான். அதிலும் எஸ்டிபிஐயுடன் ஒப்பந்தம் வைத்து அவர்களுக்கும் சீட் கொடுத்துள்ளனர். மேலும் சில கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட் கொடுத்துள்ளனர். எனவே தேமுதிகவுக்கான சீட் போதுமானதுக இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது தேமுதிகவுக்கு, அமமுகவும் கதவை இழுத்து பூட்டி விட்டதாகவே சொல்கிறார்கள்.

ஆக மொத்தம் கிடைத்த கடைசி சான்ஸையும் விஜயகாந்த் இழந்து தனி மரமாக மாறியுள்ளார் என்பது உறுதியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+