பச்சை சுயநலம்.. வாக்கு வங்கி அரசியல்.. எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமமுக அதிரடி
வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்தது குறித்து அமமுக அறிக்கை வெளியிட்டுள்ளது
சென்னை: மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும், பகைமையையும் எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்தினார். பின்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும் அந்தப் பகையை ஊதிப் பெருக்கி குளிர் காய்ந்தார். இதற்காக இவர்கள் இருவரும் மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை ஹைகோர்ட் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும், இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

தாக்கங்கள்
இந்த விவகாரம் தமிழக அரசியல் ரீதியான பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு கட்சி தலைவர்கள் இதற்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.., அந்த வகையில் மநீம தலைவர் கமல் நீதிமன்ற தீர்ப்பு குறித்து சொல்லும்போது, "வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது.. இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது" என்று கமல் விமர்சித்துள்ளார்.

செந்தமிழன்
இந்நிலையில் அமமுகவும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. இதுதொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில்வ உள்ளதாவது: "வாக்குவங்கி அரசியலுக்காக அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலமாக முந்தைய பழனிசாமி அரசு கொண்டுவந்து, தற்போதைய ஸ்டாலின் அரசும் ஆராயாமல் செயல்படுத்திய 10.5% உள் இட ஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

வன்னியர் சமூகம்
இந்த இருவரின் சுயநலத்தாலும், கபட நாடகத்தாலும் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி கல்லூரிகளில் சேர்ந்த வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவச்செல்வங்கள் மட்டுமல்ல; திடீர் இட ஒதுக்கீட்டால் இடம் கிடைக்காமல் போன 148 பிரிவிலுள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதுதான் கண்ட பலன். இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் சேர்ந்தவர்களுக்கும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதே நிலைமைதான்.

இட ஒதுக்கீடு
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன் பழனிசாமி அரசு அவசர, அவசரமாக இந்த இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோதே எங்களுடைய பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அவசரகதியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காகதான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

சமூக நீதி
109 சமூகங்களை உள்ளடக்கிய MBC பிரிவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாத அளவுக்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப்போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது" என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

தினகரன்
டிடிவி தினகரன் அவர்கள் அன்றைக்கு எழுப்பிய சந்தேகம் இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது. ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய இத்தகைய புரிதலோ, பக்குவமோ, தெளிவோ எதுவுமில்லாமல் பச்சை சுயநலத்தோடு உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து, சாதி மாச்சர்யங்கள் இன்றி அண்ணன்- தம்பிகளாக பழகி வந்த மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பல்வேறு சமூகங்களிடையே வெறுப்பையும், பகைமையையும் பழனிசாமி ஏற்படுத்தினார். பின்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலினும் அந்தப் பகையை ஊதிப் பெருக்கி குளிர் காய்ந்தார். இதற்காக இவர்கள் இருவரும் மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தீர்ப்பு
உண்மையிலேயே இவர்கள் சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்க நினைத்திருந்தால், இதில் தொடர்புடைய அனைத்து சமூகத்தினரையும் அழைத்துப் பேசி, ஒழுங்கான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்பிறகே அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீட்டினை அளித்திட வேண்டும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகாவது டிடிவி அன்றே சொன்ன வழிமுறையைப் பின்பற்றி ஆட்சியாளர்கள் செயல்படுவார்களா?? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications