பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களில் இவ்வளவு வசதிகளா.. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களை நாளை மறுநாள் (22-ந்தேதி) பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பரங்கிமலை உள்பட 13 ரயில் நிலையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த முன்னெடுத்தது. இதில் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் காணொளி மூலம் திறந்து வைப்பார் என்று ரயில்வே மூத்த அதிகாரி கூறினார்.

மறுசீரமைக்கப்பட்ட 103 நிலையங்களில், 19 ரயில் நிலையங்களில் உத்தரப்பிரதேசத்திலும், 18 ரயில் நிலையங்கள் குஜராத்திலும், ஐந்து ரயில் நிலையங்கள் சத்தீஸ்கர் மாநிலத்திலும், இரண்டு ரயில் நிலையங்கள் பீகாரிலும், மூன்று ஜார்க்கண்டிலும், ஐந்து கர்நாடகாவிலும், இரண்டு கேரளாவிலும், ஆறு மத்தியப் பிரதேசத்திலும், 15 மகாராஷ்டிராவிலும், எட்டு ராஜஸ்தானிலும், ஒன்பது தமிழ்நாட்டிலும், மூன்று தெலுங்கானா மாநிலத்திலும், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், அசாம், புதுச்சேரி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒரு நிலையமும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 90 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கியது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டன.
இப்போது மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையத்தில் கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கிறது.
சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் முக்கியமானது பரங்கிமலை. கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. கூடுதல் அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, முன்பதிவு அலுவலகம், கூடுதல் பயணிகள் இருக்கை, கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்த வசதி, டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்துள்ள பரங்கிமலை, சூலூர்பேட்டை உள்பட 13 ரயில் நிலையங்களை வரும் மே 22-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பணிகள் முடிவுற்ற 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி 22-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். தெற்கு ரயில்வேயில் மட்டும் 13 ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார். பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 13 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க உள்ளார். காணொலி காட்சி வாயிலாக காலை 10 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெற்கு ரயில்வே சார்பில் இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications