அமுதா ஐஏஎஸ் உள்பட இரு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அமுதா ஐஏஎஸ், மணிகண்டன் ஐஏஎஸ் ஆகிய இரு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம். அமுதா ஐஏஎஸ் வருவாய்த் துறையின் முதன்மை செயலாளராக உள்ளார்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். இவ்வளவு ஏன் தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக முதல்வரின் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம், தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் ஏற்கெனவே உள்துறை செயலாளராக இருந்த அமுதா, வருவாய்த் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு தற்போது முழு கூடுதல் பொறுப்பாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பொறுப்பையும் கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பிரபாகர், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டதால் அந்த பதவி காலியாக இருந்ததால், தற்போது அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது போல் நீர் வளத் துறை செயலாளர் மணிவாசன் ஐஏஎஸ், முழு கூடுதல் பொறுப்பாக விழிப்பு பணி ஆணையர், நிர்வாக சீர்திருத்த ஆணையர் ஆகிய பணிகளை கவனிப்பார் என முருகானந்தம் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு 14 நாட்கள் பயணமாக செல்கிறார். அங்கு தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களை செயல்படுத்தவுள்ளார். இந்த நிலையில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications