Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓய்வு இருக்கட்டும்.. ஆனா "இது" மட்டும் நடக்கவே கூடாது.. தோனிக்கு முன்னாள் ஜாம்பவான் முக்கிய மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் முக்கிய மெசேஜ் ஒன்றை அளித்து இருக்கிறார்.

2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வருகிறது. முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வி அடைந்த சிஎஸ்கே அடுத்து புனேவிற்கு எதிராக நடந்த போட்டியில் வென்றது.

An ex-senior player advice to CSK Captain MS Dhoni on his retirement from IPL

இதையடுத்து மும்பைக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது.

முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவரில் வெறும் 157-8 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இறங்கிய சிஎஸ்கே அணி எளிதாக 159-3 ரன்களை எடுத்து வென்றது.

இப்படி வரிசையாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த சிஎஸ்கே ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 175/8 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 52, படிக்கல் 38 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172-6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. தேவன் கான்வாய் 50 ரன்கள் எடுக்க கடைசியில் தோனி 32, ஜடேஜா 25 என்று அதிரடி காட்ட சிஎஸ்கே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆனால் அதன்பின் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிஎஸ்கே அடுத்தடுத்து வென்றது. சிஎஸ்கே மேட்ச் எந்த மைதானத்தில் நடந்தாலும்.. அவே போட்டியாக இருந்தாலும் கூட சிஎஸ்கே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்பதால் அதை பார்க்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கிவிட்டனர்.

தோனியும்.. எனக்கு பேர்வெல் கொடுக்கிறார்கள்.. நான் என் கெரியரின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறேன் என்றெல்லாம் க்ளூ கொடுக்க தொடங்கி விட்டார். அதனால் சிஎஸ்கே கேப்டன் தோனி கிட்டத்தட்ட ஓய்வு பெறுகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில்தான் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் முக்கிய மெசேஜ் ஒன்றை அளித்து இருக்கிறார்.

நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் அளித்துள்ள பேட்டியில், அவர் களத்தில் ஆடுவதை விரும்பாவிட்டால்.. அவர் டிரஸ்ஸிங் ரூமில் இருப்பதை விரும்பாவிட்டால்.. அவர் உடனே ஓய்வு பெறலாம் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டை ஓரமாக வைக்க முடிவு செய்யும் போதெல்லாம்.. அது இப்போது அல்லது அடுத்த சீசன் அல்லது பல சீசன்களுக்குப் பிறகு என்று எப்போது இருந்தாலும்.. அவர் ஓய்வு பெறுவதில் தவறே இல்லை.

ஆனால் அவர் அதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அவருக்கு பேர்வெல் கொடுக்க வேண்டும். அதை கொடுக்காமல் அவர் ஓய்வு பெற கூடாது. கடந்த முறை போல அவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓய்வு பெற கூடாது.

An ex-senior player advice to CSK Captain MS Dhoni on his retirement from IPL

அவர் இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல்லின் சிறந்த வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டுக்கும் தோனி ஆற்றிய பங்களிப்பிற்காக அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவிக்க இந்த ஓய்வு வாய்ப்பளிக்கும். அதனால் அவர் ஓய்வு பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும், நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+