தொடர்ந்து ஸ்கூட்டி பெப் பைக்குகளை திருடியது எப்படி? ஒரே டெமோ தான்.. மொத்த தாம்பரமும் ஆடிப்போச்சு
சென்னை: சென்னை தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் குறிவைத்து ஸ்கூட்டி பெப் மோட்டார் சைக்கிளை மட்டும் அடிக்கடி திருடி வந்த முதியவர் கைது செய்யப்ட்டுள்ளார். திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேனாம்பேட்டையைச் சேர்ந்த முதியவரை கைது செய்தனர். வாகனங்களை அவர் எப்படி திருடுகிறார் என்பதை செய்து காட்டினார். இதை பார்த்து போலீசார் ஆடிப்போனார்கள்.
சென்னையை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் ஸ்கூட்டி பெப் என்ற வாகனங்கள் மட்டும் அடிக்கடி திருட்டு போகவதாக புகார்கள் வந்தது. இது குறித்து பலரும் அளித்த புகாரின் பேரில் சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீலி தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு முதியவர் வாகனங்களை திருடி செல்வது தெரியவந்தது. அந்த முதியவர் யார் என்பதை விசாரித்த போலீசார், அவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் (வயது 60) என்பதை கண்டுபிடித்து, அவரை தேடி சென்று கைது செய்தனர்.

பின்னர் ஹரிஹரனிடம் ஏன் ஸ்கூட்டியை மட்டும் திருடினாய்.. பெரிய வண்டியை என் திருடவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர், எனக்கு பெரிய வண்டிய ஓட்டத்தெரியாது. அதனால் ஸ்கூட்டி பெப் வண்டியை மட்டும் குறிவைத்து திருடி வந்தேன்., கடந்த இரண்டரை மாதங்களில் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி உள்ளேன் என்றார்.
முதியவர் ஹரிகரன் ஸ்கூட்டி பெப் பைக்குகளை திருடுவது எப்படி என்றால், வாகனத்தை யார் நிறுத்தி செல்கிறார்கள் என்பதை கவனிக்கிறார். பின்னர் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொது இடங்களில் இப்படி நிறுத்தி இருக்கும் வாகனங்களை கள்ளச்சாவி மூலமாக திறக்கிறார். சில இடங்களில் ஸ்கூட்டியின் கீழ்பகுதியில் உள்ள ஒரு வயரை துண்டித்து, பின்னர் துண்டு வயர் மூலம் இணைப்பு ஏற்படுத்தி திறக்கிறார். சைட் லாக் போட்ட வண்டிகளை, பக்கவாட்டு பூட்டை உடைத்தும், பிட்டு வயர் சொருகி ஸ்டார்ட் செய்தும் திருடி உள்ளார்.
இது தொடர்பாக தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு வாகனத்தை தான் எப்படி திருடுவேன் என்பதை செய்முறையும் செய்து காட்டினார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இதை காட்டுகிறார்கள்.. இப்படி செய்தால்,, புதிய திருடர்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். இதேபோல் இதை சிலர் டிவிஎஸ் நிறுவனத்தை டேக் செய்து, இந்த ஓட்டையை அடைத்து, திருட முடியாத அளவிற்கு டெக்னாலஜியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதனிடையேயே திருடிய ஹரிகரன் தான் திருடிய வாகனங்களை எங்கு ஒளித்து வைத்துள்ளார் என்பதை போலீசாரிடம் கூறினார். அங்கு சென்ற போலீசார் மொத்தம் 14 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே திருடிய வாகனங்களை எப்படி ஹரிகரன் விற்றார் என்பது குறித்து கேட்ட போது, திருடிய இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை மாற்றி, கட்சி சின்னம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி, அவற்றை திருவண்ணாமலை மற்றும் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களுக்கு சென்று சாதாரண வியாபாரிகள், பால் வியாபாரிகளை குறி வைத்து குறைந்த விலைக்கு விற்றுவிடுவாராம். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications