விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. "நமக்கான ரயில் வரும்".. எஸ்.ஏ.சிக்கு சொன்ன புத்திமதி? வைரலாகும் வீடியோ
சென்னை: நமக்கான ரயில் வரும், அது வரை பிளாட்பார்மில் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் அன்று சொன்ன குட்டி ஸ்டோரியை இன்று அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட மோதலுடன் நெட்டிசன்கள் பொருத்தி பார்த்து இது எஸ்ஏசிக்கு சொன்ன அறிவுரையாக இருக்கலாம் என தெரிவிக்கிறார்கள்.
1992 ஆம் ஆண்டு நாளையத் தீர்ப்பு படத்தின் மூலம் நடிகர் விஜய்யை முழுநேர நடிகராக அறிமுகப்படுத்தியவர் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர்.
சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பை தாண்டி அவரது தந்தையும் ஒரு காரணம் ஆவார். சினிமாவில் விஜய்யை ஒரு உயர்ந்த இடத்தில் பார்த்துவிட்ட எஸ்ஏசிக்கு அவர் அரசியலிலும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என விரும்புகிறார்.

தேர்தலில் போட்டி
இதற்காக அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் அவரது ரசிகர்கள் நிறைய நலத் திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அவரது தந்தை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜய்யோ இப்போது வேண்டாம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

அவசரம்
எனினும் இதை ஏற்காத எஸ்ஏசி அவசர அவசரமாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தார். உடனே விஜய் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதாவது தனது தந்தையின் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனது பெயரையோ கொடியையோ தந்தை எஸ்ஏசி, தாய் ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்த தடை கோரி வழக்குப் பதிவு செய்தார் விஜய்.
Recommended Video

நெட்டிசன்
மேலும் ஊடகங்களுக்கு எஸ்ஏசி அளித்து வரும் பேட்டியில் தனக்கும் தனது மகன் விஜய்க்கும் மனகசப்புகள் இருந்து வருவதை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் தற்போது விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய் கூறிய குட்டி ஸ்டோரியை தந்தையுடனான மோதல் குறித்து நெட்டிசன்கள் பொருத்தி பார்க்கிறார்கள்.

விருது விழா
2017ஆம் ஆண்டு தனியார் தொலைகாட்சி சேனலின் நிகழ்ச்சியில் துப்பாக்கி, கத்தி, தெறி என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்ததற்காக அவருக்கு இரு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது விஜய் மேடையில் பேசுகையில் கிடைச்ச ரயிலில் ஏறி நெனச்ச இடத்திற்கு செல்ல முடியாதுங்க. நாம்போகும் இடத்திற்கான ரயில் வர வேண்டும் என்றால் நாம் கொஞ்ச நேரம் பிளாட்பார்ம்மில் நின்றுதான் ஆக வேண்டும்.

ஏதோ தோன்றியது
நான் நல்லா இருக்கணும்னு நீங்கள் எல்லாரும் நினைக்கிறீங்க. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நான் நெனக்கிறேன். ஆனால் நாம இரு பேரும் நல்லா இருக்கணும்னு நெனக்கற விவசாயிகள் இப்ப நல்லாயில்லைங்க. எந்த பலனும் கிடைக்காமல் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை நினைத்தால் ரொம்ப வலிக்குதுங்க. விவசாயிகள் நல்லா வாழற அரசாங்கம் வேண்டும். ஏதோ தோணுச்சி பேசிட்டேன் என விஜய் அந்த மேடையில் பேசியிருந்தார்.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கிடைச்ச ரயில் ஏறி நெனச்ச இடத்திற்கு செல்ல முடியாது. நமக்கான ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும் என விஜய் சொல்லியது நிச்சயம் அரசியலைத்தான் என்று நன்றாகவே தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என எஸ்ஏசி வலியுறுத்தியதாக கூறப்படுவதைதான் கிடைச்ச ரயிலில் நெனச்ச இடத்திற்கு போக முடியாது என்று விஜய் மறைமுகமாக அறிவுரை கூறியதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நமக்கான ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும் என விஜய் கூறியது 2026 ஆம் ஆண்டு தேர்தலாக இருக்கும் என்றே தெரிகிறது. இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது அப்பா- மகன் மோதல் சம்பவத்தையொட்டி இது வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications