அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி முறைகேடு புகார்.. 177 பள்ளிகள் பாதிப்பு.. இன்று ஜாமீன் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை அமைந்தகரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பே அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணம் யாரிடம் சென்றது என்பதை அன்பில் மகேஷிடம் விசாரித்தால்தான் கண்டறிய முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Anbil Mahesh Anbil Mahesh Bail Rs 100 Crore Scam 100

முத்துக்குமார் தலைமறைவு

மேலும், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் முத்துக்குமார் தலைமறைவாக இருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முத்துக்குமாரின் உறவினர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலங்கள், அவர் அன்பில் மகேஷின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறி முன்ஜாமீன் கேட்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் அமைச்சர் என்பதால், அவர் சாட்சிகளையோ விசாரணையையோ பாதிக்க வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

அமைந்தகரையில் கைது

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு அன்பில் மகேஷின் நடமாட்டத்தை உளவுத்துறையினரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கண்காணித்து வந்தனர். அக்டோபர் 26-ம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவர் கீழே வந்தபோது போலீசார் கைது செய்தனர். சாதாரண உடையில் இருந்த போலீசார் அவரைக் கண்காணித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இன்று ஜாமீன் மனு விசாரணை

அன்பில் மகேஷை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி பெற்றனர். அதன்படி நவம்பர் 2-ம் தேதி முதல் நேற்று நவம்பர் 4-ம் தேதி மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அன்பில் மகேஷை, நாளை வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களைத் திரும்ப ஒப்படைக்கக் கோரியும் அவரது தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி, இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வருகின்றன. ஏற்கனவே முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தபோது நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள், தற்போதைய ஜாமீன் மனு மீதான விசாரணையிலும் கவனத்தில் கொள்ளப்படலாம்.. அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா, கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திரும்பப் பெற அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+