டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றி, டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்துள்ளது. இதற்கிடையே இந்த தோல்விக்கு ஈரான் போரும் இஸ்ரேலுடனான அமெரிக்காவின் உறவும்தான் முக்கிய காரணம் என்று துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது ஈரான் விவகாரத்தில் டிரம்ப் எடுத்த முடிவே தோல்விக்கு காரணம் என்று துணை அதிபர் வேன்ஸ் சாடியுள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள வெற்றி, டிரம்ப் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் இரண்டில் எதாவது ஒரு அவையை டிரம்ப் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் மிக மோசமாக தோல்வி அடைந்து இரண்டு அவைகளிலும் டிரம்ப் அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

JD Vance US Donald Trump

டிரம்ப் நிர்வாகம்

மேலும் டிரம்ப் நிர்வாகம் மீது மக்கள் எந்தளவுக்கு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதையும் இது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தனது பெயர் தேர்தலில் இல்லாததாலேயே குடியரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.. தான் போட்டியிட்டிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என டிரம்ப் கூறினாலும் கூட அவரது அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பது மிக தெளிவாக தெரிகிறது. குறிப்பாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, ஈரான் போர் உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஜேடி வான்ஸ்

இதற்கிடையே துணை அதிபரான ஜேடி வான்ஸ் கூட தோல்விக்கு டிரம்ப் தான் காரணம் என மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் வாக்களிக்க வராதது மட்டும் தோல்விக்கு காரணமில்லை. 2024ல் டிரம்ப் - வேன்ஸ் கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் கணிசமானோர் இந்த முறை எதிர்க்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்" என்றார்

4 காரணங்கள்

உள்கட்சி கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் டேட்டா அடிப்படையில் நான்கு முக்கிய காரணங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது முதலாவது காரணம். அடுத்து விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது. 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளாக இருந்துள்ளன. மேலும், இஸ்ரேலுடனான அமெரிக்காவின் உறவிலும் மாற்றம் தேவை என அவர்கள் கருதியதாக வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நான்கும் தான் குடியரசு கட்சி தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது.

அதாவது 2024 பொது தேர்தலில் டிரம்ப்- வேன்ஸ் கூட்டணிக்கு மிக பெரிய ஆதரவு கிடைத்திருந்தது. இந்த தேர்தலில் எதிர்ப்பு அதிகரிக்க டிரம்ப் தான் காரணம் என்று வேன்ஸ் மறைமுகமாக குற்றஞ்சாட்டியுள்ளார். டிரம்ப் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டார் என்பதை பெயரை குறிப்பிடாமல் வேன்ஸ் சாடியுள்ளார்.

தலைவலி தான்

இந்த தோல்வியால் அடுத்த 2 ஆண்டுகள் டிரம்ப் அரசுக்கு தலைவலி தான். ஜனநாயக கட்சி இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளதால், டிரம்ப் அரசு எடுக்கும் முடிவுகள் உடனடியாக செயல்படுத்த முடியாது. அதற்கு ஜனநாயக கட்சி முட்டுக்கட்டை போடும். அதிகாரிகளிடம் விளக்கம், முக்கிய முடிவுகளை ஆய்வு என இழுத்து கொண்டே போகும்.

இருப்பினும், இந்த தோல்வி தனது ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு அல்ல என்று டிரம்ப் மறுத்துள்ளார். பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் தனது அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறிய டிரம்ப், குடியரசு கட்சி வேட்பாளர்கள் மக்களை வாக்களிக்க தூண்டும் வகையில் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+