அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி பேசியது சட்ட விரோதம்.. எனக்கு மட்டுமே உரிமை.. எகிறி அடிக்கும் ராமதாஸ்
சென்னை: அதிமுக கூட்டணியில், பாமக இணைந்தது, தொகுதி பங்கீடும் முடிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் கூட்டாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்த நிலையில், ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அன்புமணி பாமக சார்பாக கூட்டணி பேச்சு நடத்தியது சட்ட விரோதம் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ்க்கும் - மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. கட்சிக்கு நானே தலைவர் இருவருமே உரிமை கோரி வருகிறார்கள். அதேநேரத்தில் தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி, பாமக தங்கள் இருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது. ஆனால், இதனை ராமதாஸ் தரப்பு மறுத்து வருகிறது.

சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அன்புமணி அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்த சந்திப்பிக்கு பிறகு அதிமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது ராமதாஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.
ராமதாஸ் அடுத்த கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவும் நிலையில், இன்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
பாமக பெயரை சட்ட விரோதமாக அன்புமணி பயன்படுத்துவதாகவும், அதிமுகவுடன் அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தை சட்ட விரோதமானது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறியுள்ள ராமதாஸ், அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications