விசில் அடித்த தொண்டர்கள்! மைக்கை பிடித்து அன்புமணி டென்ஷன்! பாமக மேடையில் நடந்தது என்ன?
சென்னை: பாமக மாணவர் சங்கம் சார்பில் நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உள்ளே நுழைந்ததும் நிர்வாகிகள் விசில் அடித்த போது டென்ஷனான அன்புமணி, விசிலை குறைத்துக் கொண்டு கைகளை தட்டுமாறு தெரிவித்தார்.
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாணவர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது.

காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என சொல்லப்பட்ட நிலையில் மதியம் 12 மணிக்கு மேல் அன்புமணி பொதுக் குழு கூட்டம் நடந்த இடத்திற்கு வருகை தந்தார்.
அவர் விழா மேடைக்கு ஏறினார். அப்போது அங்கிருந்த மாணவர் சங்கத்தினர் காது கிழியும் அளவுக்கு விசில் அடித்தனர். இதனால் கடுப்பான அன்புமணி, மைக்கை வாங்கி, "விசிலை குறைத்துக் கொள்ளுங்கள் கைகளை தட்டுங்கள்" என எச்சரித்தார்.
ஆனாலும் தொடர்ந்து சில இளைஞர்கள் விசில் அடித்தவண்ணம் இருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்புமணி பாமக தற்போது அதிமுக- பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பல கட்சியினர் விசிலுக்கு தடை விதித்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார்டில் குப்பைகளை சேகரிப்பதற்காக விசில் அடித்து குடியிருப்புவாசிகளுக்கு சமிக்ஞை கொடுக்க தூய்மை பணியாளர் விசில் அடித்தார். அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலர் அந்த விசிலை வாங்கி குப்பையில் வீசிவிட்டு, ஒலிப்பெருக்கியை கொடுத்தார். அதில் ஏற்கெனவே குரல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது போல் விசில் அடிப்பது தேவையில்லாமல் தவெகவுக்கு விளம்பரத்தை தேடி கொடுக்கும் என்பதால்தான் விசில் அடிக்க வேண்டாம் என்கிறார்கள். "விசில் = தவெக" என்ற எண்ணம் தான் காரணம். தமிழக அரசியலில் விசில் இப்போது 'சின்னம் போர்' ஆக மாறியிருக்கிறது - யாரும் விசில் அடித்தால், அது தவறுதலாக தவெகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications