'வடக்கு’ வாழாமல் தேயுதே.. இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்..! பாடமெடுக்கும் ’டாக்டர்’ அன்புமணி..!
சென்னை: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 4.04 லட்சம் பேரும் மாணவர்கள் 3.35 லட்சம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.02 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்று கோவை முதலிடத்தை பெற்றுள்ளது. அது போல் 81.40% சதவீதம் தேர்ச்சி பெற்று வேலூர் கடைசி இடம் பிடித்துள்ளது.
பிளஸ்-1 தேர்வு: கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்தன. இதேபோல பதினோராம் வகுப்பு பொதுத் தேர்விலும் வட மாவட்டங்கள் கடைசி இடங்களை பெற்றிருக்கின்றன. குறிப்பாக திருவாரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன மாவட்டங்களும், திருவள்ளூர் கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களும் கடைசி இடங்களையே பெற்று வருகின்றன.
அன்புமணி ராமதாஸ்: இந்நிலையில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ள நிலையில், வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.17 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.24% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மாணவர்களுக்கு வாழ்த்து: தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன். 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சியடைய வாழ்த்துகிறேன். கடந்த காலங்களைப் போலவும், நடப்பாண்டின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் போன்றும் 11-ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களிலும் வட மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன.
கடைசி இடங்கள்: கடைசி 10 இடங்களைப் பிடித்த வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய அனைத்துமே வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும். அதேபோல், கடைசி 15 இடங்களை பிடித்தவற்றில் 13 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும்.
சிறப்பு திட்டங்கள்: 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. அதற்காக வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தைக் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications