சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ப்ளீஸ்.. ஸ்ட்ரைட்டா நுரையீரலையே பாதிக்கிறது.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வைத்த சூப்பர் கோரிக்கை

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த இந்தியாவின் சொத்துக்களே இளைஞர்கள்தான்.. ஆனால், புகைப் பழக்கத்தால் அவங்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம்... அதைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப் பழக்கத்திற்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை (Comprehensive Cessation Service) தமிழக அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    Ramadoss, OPS கொடுத்த Clear Signal

    இன்று புகையிலை ஒழிப்புநாள்.. இதையொட்டி அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

    தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

    ''கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில் சில நன்மைகளையும் விதைத்திருக்கிறது. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களில் 60 விழுக்காட்டினர் அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று கரோனா காலத்தில் முடிவெடுத்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற உதவ வேண்டியது அரசுகளின் கடமையாகும்

    தீமை

    தீமை

    புகைப்பழக்கத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் மே 31 ஆம் நாள் உலக புகையிலை ஒழிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் புகைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏதேனும் ஒரு முழக்கத்தை முன்வைத்து, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உலக சுகாதார நிறுவனத்தின் வழக்கமாகும்.

    கொள்கை

    கொள்கை

    இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு நாளில், புகையிலைப் பொருட்கள் மற்றும் புகைப் பிடித்தல் பழக்கத்தை ''கைவிட உறுதியெடுங்கள் (Commit to Quit)'' என்ற முழக்கத்தை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்துள்ளது. இது சரியான நேரத்தில் முன்வைக்கப்படும் மிகச்சரியான கொள்கை முழக்கம் ஆகும்.

     புகையிலை

    புகையிலை

    புகையிலை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 80 லட்சம் பேரும், இந்தியாவில் 12 லட்சம் பேரும் கொல்லப்படுகின்றனர். உலகமெங்கும் 130 கோடிபேர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 10 கோடி பேரையாவது புகையிலைப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான இலக்காக உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கிறது. இன்றைய சூழலில் இந்த இலக்கை எட்டுவது மிகவும் எளிதானதும், மிகவும் முக்கியமானதும் ஆகும்.

     வைரஸ்

    வைரஸ்

    புகையிலை ஒழிப்பு ஏன் மிகவும் முக்கியமென்றால், புகை பிடிப்பவர்களைத்தான் கரோனா வைரஸ் மிகவும் அதிகமாக தாக்குகிறது என்பதுதான். கரோனா வைரஸ் நுரையீரலை அதிகம் தாக்குகிறது. அதே நுரையீரல்தான் புகை பிடிக்கும் பழக்கத்தாலும் பாதிக்கப்படுகிறது. புகை பிடிக்காதவர்களைவிட, புகை பிடிப்போர் கடுமையாக பாதிக்கப்படவும், உயிரிழக்கவும் 50% கூடுதலாக வாய்ப்பு உண்டு என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய உலகளாவிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

    ஆய்வு

    ஆய்வு

    புகையிலை ஒழிப்பு எந்த வகையில் மிகவும் எளிதானது என்றால், புகை மற்றும் புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் அப்பழக்கத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு கரோனா காலத்தில் வந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதுதான். ஆனால், புகை பழக்கம் என்பது போதை என்பதால் அதற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தாலும் கூட, அவர்களால் தானாக மீண்டு வர முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

     விளம்பரங்கள்

    விளம்பரங்கள்

    இத்தகைய சூழலில் புகை பழக்கத்திலிருந்து மீள வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டியதுதான் மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியவை புகையிலைப் பொருட்களைத் திணிக்கும் மறைமுக விளம்பரங்களை ஒழித்தல், பொது இடங்களில் புகை பிடிப்பதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துதல், அனைத்து புகையிலைப் பொருட்கள் மீதான வரியைத் தொடர்ந்து அதிகரித்தல், புகையிலைப் பொருட்கள், சிகரெட் ஆகியவற்றின் விற்பனையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை ஆகும்.

     உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இவற்றில் புகையிலைப் பொருட்கள் தொடர்பான மறைமுக விளம்பரங்களைத் தடை செய்வதுதான் மிக முக்கியப் பணியாகும். இந்தியாவில் புகை பிடிப்பவர்களில் 12 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கு மாற்றாக 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து மறைமுக விளம்பரங்களைப் புகையிலை நிறுவனங்கள் செய்கின்றன.

    தடை

    தடை

    புகையிலைப் பொருட்களை விற்கும் கடைகள் மூலமும், கிரிக்கெட் போட்டிகள் வழியாகவும் புகையிலை திணிப்பு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. திரைப்படங்களிலும் புகையிலை விளம்பரங்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன. இந்த விளம்பரங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

     முழக்கம்

    முழக்கம்

    இளைஞர்கள்தான் இந்தியாவின் சொத்துகள் ஆவார்கள். ஆனால், புகைப் பழக்கத்தால் அவர்களை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறோம். அதைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலைக்கும், புகைப் பழக்கத்திற்கும் அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த சேவையை (Comprehensive Cessation Service) தமிழக அரசு உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் ''கைவிட உறுதியெடுங்கள்'' முழக்கத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    Anbumani Ramadoss says, TN Gov need to people recover from smoking
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X