மக்கள் மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இருக்குறாங்க.. பியூஷ் கோயலை சந்தித்த பின் அன்புமணி அட்டாக்
சென்னை: கடனை திருப்பி செலுத்த கடன் வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்க கடன் வாங்குகிறார்கள். இதெல்லாம் வெட்கக்கேடு என்று திமுக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். நேற்று சென்னையில் பியூஸ் கோயலை சந்தித்த அண்புமணி ராமதாஸ் திமுக மீது மக்கள் கடும் கோபம், ஆத்திரத்தில் இருப்பதாகவும் கூறினார்.
பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். சென்னை மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

டிடிவி தினகரன் பியூஸ் கோயல் சந்திப்பு
இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவது உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணியை பியூஷ் கோயல் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாரிவேந்தர், அன்புமணியை சந்தித்த பியூஷ் கோயல், நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை விடுத்து இருக்கிறார்.
அன்புமணி விமர்சனம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பியூஷ் கோயலை சந்தித்த பிறகு அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது.
இன்று பியூஷ் கோயலை சந்தித்து வரும் தேர்தலில் எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை நோக்கி நாங்கள் செல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் பல தரப்பு மக்கள் போராடி வருகிறார்கள். இடைநிலை ஆசிரியர்கள் 25 நாட்களாக போராடி வருகிறார்கள்.
கடும் ஆத்திரத்தில் உள்ளனர்
ஊழல், மோசமான திமுக ஆட்சியை எதிர்த்து மக்கள் அன்றாடம் போராட்டம் செய்து வருகிறார்கள். திமுக மீது அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக பெற்றோர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கோபம், ஆத்திரத்தில் உள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை கலாசாரம்.
நேற்று கூட திருத்தணி அருகே போதைப் பொருட்களை பயன்படுத்தி கொடூரமான கொலைகள். அன்றாடம் 3, 4 கொலைகள் போதைப் பழக்கத்தால் நடந்து வருகிறது. பாமக அதிமுக கூட்டணியில் சேர்ந்ததற்கு காரணம் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான். திமுக பொய்களை சொல்லி ஆட்சி செய்து வருகிறது. மூலதன செலவுக்குத்தான் கடன் வாங்க வேண்டும்.
இதெல்லாம் வெட்கக்கேடு
நீங்கள் வட்டியை திருப்பி கட்ட கடன் வாங்குகிறார்கள். கடனை திருப்பி செலுத்த கடன் வாங்குகிறார்கள். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்க கடன் வாங்குகிறார்கள். இதெல்லாம் வெட்கக்கேடு. வரி வருவாய் கொடுத்துட்டு போங்க. கடன் வாங்கித்தான் இதை கொடுக்க வேண்டுமா? இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழகம்தான். இதுதான் உங்கள் நிர்வாகத் திறமையா? சும்மா விளம்பரப்படுத்திட்டு இருக்கீங்க.." என்று பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications