திமுக கூட்டணியில் பிரேமலதா! ஆனா.. அதிமுக கூட்டணிக்காக பாடுபடுகிறார்! அண்ணியாரை கலாய்த்த அன்புமணி
சென்னை: பிரேமாதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இருந்து அதிமுக கூட்டணிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைய வைத்திருக்கிறார்கள், பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல் திமுகவின் இந்த செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைய வைத்திருக்கிறார்கள்.. இதே திமுக பெண்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.

பெண் சிசுவை கருவிலேயே கொலை செய்ததற்கு சமமான செயல் திமுகவின் இந்த செயல். இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகிறது பெண்கள் படிக்க வேண்டும் வேலைக்கு போக வேண்டும் அதிகாரம் வேண்டும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று வாழ்க்கையில் எவ்வளவோ போராட்டங்களை சந்தித்து வருகிறார்கள்.
அன்புமணி ராமதாஸ்
அதுமட்டுமில்லாமல் இது 40 ஆண்டு கால கனவு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குறைந்தது 33 விழுக்காடு கொடுக்க வேண்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த சட்ட மசோதாவை எரித்தது தேச துரோக செயல். பெரிய குற்றம் அதுவும் மகளிர் காண இட ஒதுக்கீடு மசோதா.. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எரித்தது தேச துரோகம். இது வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்து ஒரு முதலமைச்சர் கொண்டாடுகிறார் என்றால் அவரது மனநிலையை தமிழ்நாட்டுப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா
நிறைவேறி இருந்தால் தமிழ்நாட்டிற்கு 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து பெண்கள் 20 எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று இருப்பார்கள். 2031 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து 117 பெண் எம்எல்ஏக்கள் கிடைத்திருப்பார்கள். உத்தரப் பிரதேஷ் பீகார் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டுக்கும் 50 சதவீத விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று தெளிவாக பிரதமரும் உள்துறை அமைச்சரும் தெரிவித்துவிட்டனர்.
முக ஸ்டாலின்
இந்தியாவிலே உள்ள 28 மாநிலங்களுக்கும் சரிசமமாக 50 விழுக்காடு அதிகரித்து இருக்கும் இதிலே முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை? தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் இன்றைக்கு கொதித்துப் போய் இருக்கிறார்கள். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்கள் சட்டமன்ற உறுப்பினராகக் கூடாதா? ஒரு பக்கம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை மற்றொருபுறம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சட்டத்தையும் திமுக எதிர்க்கிறது.
பிரேமலதா விஜயகாந்த்
திமுகவை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தேமுதிக விஜயகாந்த் தொடங்கினார் ஆனால் அந்த திமுக உடனே பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி வைத்திருக்கிறார் இது ஒருபுறம் இருந்தாலும் அந்த கூட்டணிக்கு சென்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.
திருப்பரங்குன்றம்
அவர் ஒருவரே போதும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கஞ்சா மது கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று முதலமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே எங்கு பார்த்தாலும் போதை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று எங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும் என சொல்கிறார்." என்கின்றார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications