அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை... ஆத்திரத்தில் பெண் காவலரின் மண்டையை பிளந்த போலீஸ் கணவர்!
சென்னை: சென்னையில் அத்தை மகளுடன் வீடியோ காலில் பேச தடை விதித்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தனது மனைவியை(பெண் காவலர்) மண்டையை உடைத்தார். இதையடுத்து போலீசார் பெண் காவலரின் கணவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ராஜூ (42). இவர் சென்னை மாநகர காவல் துறையில் நுண்ணறிவு பிரிவில் காவலாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கனிமொழி (40), தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

ராஜபாளையத்தில் உள்ள தனது அத்தை மகளுடன் ராஜூ, அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கனிமொழி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணவனை கண்டித்துள்ளார். ஆனால், இதை கேட்காமல் ராஜி தொடர்ந்து தனது அத்தை மகளுடன் பேசி வந்துள்ளார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ராஜூ, அத்தை மகளுடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். இதனால் கோபமடைந்த கனிமொழி, கணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜூ, உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, கனிமொழியின் தலையில் ஓங்கி அடித்தாராம்.
இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கனிமொழி கொடுத்த புகாரின்படி, எழும்பூர் போலீசார் நுண்ணறிவு காவலர் ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications