Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீர்ப்பு வந்தவுடனே கதறி அழுத ஞானசேகரன்.. சமாதானப்படுத்திய வழக்கறிஞர்கள்! நீதிமன்றத்தில் நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைக் கேட்டவுடன் ஞானசேகரன் தனது கைக்குட்டையை வைத்துக் கொண்டு கதறி அழுததாகவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களே அவரை சமாதானப்படுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சக மாணவருடன் அமர்ந்து பெண் ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இருவரையும் மிரட்டியுள்ளார். மேலும், அந்த மாணவரை விரட்டிவிட்டு, மாணவியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

Anna University Assault Case Gnanasekaran Breaks Down as Court Delivers Verdict

ஞானசேகரன்

இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. வெறும் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையே நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது ஞானசேகரன் என்ன செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதறி அழுத ஞானசேகரன்

அதாவது ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்த போது, அதே கேட்டவுடன் ஞானசேகரன் கதறி அழுதுள்ளார். தனது கைக்குட்டையைக் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுததாகக் கூறப்படுகிறது. அவரது சார்பில் அரசு நியமித்த வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில், அவர்களே ஞானசேகரனை சமாதானம் செய்துள்ளனர்.

அதன் பிறகே நீதிபதியிடம் தனக்குத் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருப்பதாகவும் தந்தையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மா, சகோதரி மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மகள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இதற்கு போலீஸ் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஞானசேகரின் தண்டனை விவரங்கள் வரும் ஜூன் 2ம் தேதி, அதாவது வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

பின்னணி

கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். விசாரணையைத் தொடர்ந்து, ஞானசேகரனைக் கடந்த டிசம்பர் 24ல் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்தது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள்

பாலியல் வன்கொடுமை, ஆதாரங்களை அழித்தல், பெண்ணை சட்டவிரோதமாகக் கட்டுப்பாட்டில் வைத்தல், நிர்வாணப்படுத்துதல், மிரட்டல், அந்தரங்க புகைப்படம் எடுத்து வெளியிட்டது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 12 பிரிவுகளின் குற்றஞ்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஞானசேகரனுக்கு எதிரான 11 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும், தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக வழக்கை ஜூன் 02 ம் தேதி தீர்ப்பைத் தள்ளிவைத்தார். அப்போது தான் ஞானசேகரன் கதறி அழுதார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+