அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார வழக்கு- கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஞானசேகரனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. மேலும் ஞானசேகரன் போனில், சார் என குறிப்பிட்டதாகவும் இதனால் யார் அந்த சார் என்ற சர்ச்சையும் வெடித்தது. தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் திமுக அனுதாபிதான்; திமுக உறுப்பினர் இல்லை; அவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்? என கேட்டிருந்தார்.
இதனிடையே நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, ஞானசேகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஞானசேகரன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications