முதல்வரையும் சேர்த்துதான் ‘விவசாயியா?’னு கேட்கிறார் அமைச்சர்.. மன்னிப்பு கேட்கணும்.. அண்ணாமலை சாடல்!
சென்னை : எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களது மனசு மாறியிருக்கிறதா? மாறினால் எதற்காக மாறியிருக்கிறது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 8 வழிச்சாலை, பரந்தூர் விமான நிலைய திட்டங்கள் குறித்து திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் குறித்து தெளிவான திட்டமிடல் தமிழக அரசிடம் இல்லை, இது குறித்து மக்களிடம் கேட்டு அவர்கள் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எட்டு வழிச்சாலை தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசிய கருத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

முதல்வரை கேட்கிறார் அமைச்சர்
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "திமுக அமைச்சர் எ.வ.வேலு பச்சைத் துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா? என்று கேட்கிறார். அமைச்சர் பச்சைத்துண்டு போட்ட மு.க.ஸ்டாலினையும் சேர்த்து விவசாயியா? என்று கேட்கிறார். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயம் செய்யக்கூடிய விவசாயி கிடையாது. சொந்தமாக நிலத்தில் இறங்கி விவசாயம் செய்யும் விவசாயி கிடையாது. மேடையில் பச்சைத் துண்டு போட்டு பேசுபவர்.

ஏன் மாறினீர்கள்?
அந்தக் கட்சியினர் தமிழகத்தை இப்படித்தான் பார்க்கிறார்களா? எவ வேலு கூறியது விவசாயிகளை அவமானப்படுத்துவது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். எட்டு வழிச்சாலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? அவர்களது மனசு மாறியிருக்கிறதா? மாறினால் எதற்காக மாறியிருக்கிறது? அப்படி இருந்தால் மத்திய அரசின் ஏராளமான திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள்? தமிழக மக்களுக்கு முதல்வர் நேரடியாக விளக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பரந்தூர் விமான நிலையம்
இதே பிரச்சினை சென்னை பரந்தூர் விமான நிலைய விவகாரத்திலும் உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் பிரதமர் மோடியின் கனவு. எங்கே எல்லாம் பெரிய விமான நிலையங்கள் வரவில்லையோ, அங்கே சிறிய விமான நிலையங்களை கொண்டு வர பிரதமர் உந்துசக்தியாக இருந்துள்ளார்.

ஒரு இடத்தை விட்டுவிட்டு
பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி செலவில் வர உள்ளது. கடந்த ஆட்சியில் பரந்தூர் மட்டுமில்லாமல் இன்னொரு இடமும் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட மற்றொரு இடத்தை விட்டுவிட்டு, 4 இடத்தை மட்டும் அனுப்பியது திமுக அரசு. அதிமுக அரசு மாமண்டூரையும் பரிசீலித்தது. தி.மு.க ஆட்சியில் பரந்தூர், படாளம், திருப்போரூர், பன்னூர் ஆகிய பகுதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விரைந்து கொண்டு வர வேண்டும்
விமான நிலையம் அமைக்க தேர்வு செய்த இடம் அனைத்துவிதமான பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகே அனுமதி கிடைக்கும். 2வது விமான நிலையம் தமிழ்நாட்டிற்கு கண்டிப்பாக வேண்டும். இதனால், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பிரச்சனை இல்லாமல் வேகமாக விரைந்து விமான நிலைய திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அரசின் திட்டமிடல் சரியில்லை
மாநில அரசின் திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தாலும் பரந்தூரில் இருப்பவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தி.மு.க அரசின் திட்டமிடல் சரியில்லாத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு வரும் திட்டத்திற்கு இவர்களாகவே தடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அமைச்சர்கள் குழு
எந்தவிதமான கோரிக்கையை அரசே வைத்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு தெரியவந்துள்ளது. இதைச்சரி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு அப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக விவகாரம்
மேலும் பேசிய அவர், "2017முதல் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டது கிடையாது. இது அவர்களின் பிரச்சனை. அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு எடுப்பார்கள். அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பது பாஜகவின் கருத்து. ஜனநாயக ரீதியில் பலமாக இருக்க வேண்டும். அனைவரின் கண்களும் பாஜக மீது இருக்கும்போது பாஜக அரசியல் அதிரடியாகத்தான் இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications