2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி! எடப்பாடி பழனிசாமிக்கு ஹைவோல்ட் ஷாக் கொடுத்த அண்ணாமலை!
சென்னை: 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரப்போவது உறுதி என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். 2026ல் மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்து முதலமைச்சராகும் கனவில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலையின் இந்த பேட்டி பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இன்னொரு கட்சியினுடைய பி டீமாகவோ, சி டீமாகவோ வரமாட்டோம் என்றும் தனித்துவத்துடன் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் அண்ணாமலை நம்பிக்கை பொங்க பேசியிருக்கிறார். பாஜக பவருக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிமுகவுடனான பாஜக கூட்டணி கேள்விக்குறியாகியுள்ளது.
அண்ணாமலையின் இன்றைய பேட்டி குறித்து கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த விவகாரத்தில் இனியும் இப்படியே பேசவிட்டு பார்த்துக் கொண்டிருந்தால் அதிமுக தொண்டர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது.
விநாயகர் சதுர்த்தி முடிந்த கையோடு அண்ணாமலையின் இன்றைய பேட்டிக்கு எடப்பாடி பழனிசாமி பிரஸ்மீட் மூலம் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications