‘திகில்’ கிளப்பும் அன்புஜோதி ஆசிரமம்.. மேட்டரை கையில் எடுத்த அண்ணாமலை.. அமித்ஷாவுக்கு பறந்த கோரிக்கை
திமுக அரசு மீது குற்றம்சாட்டி அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பி இருக்கிறார்.
சென்னை : அன்புஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று இயங்கி வந்தது. அங்கு பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் நடந்து வந்துள்ளது அம்பலமாகி உள்ளது.
அந்த காப்பகத்தில் பலாத்காரத்திற்கு இணங்காத பெண்களை குரங்குகளை விட்டு கடிக்கவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த ஆசிரமம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

அன்புஜோதி ஆசிரமத்தில் கொடூரம்
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி இல்ல ஆதரவற்றோர் மற்றும் மனநல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப் பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகர்மான புகார்கள் வெளியாகின. இது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை கடிதம்
இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தமிழ்நாட்டில் பல வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்.

உடல் உறுப்புகளுக்காக
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. பலர் காணாமல் போயுள்ளனர். இந்த ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் காணாமல் போயுள்ளர். விசாரணையில் அவருடன் 52 பேர் பெங்களுரு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் 14 பேரை காணவில்லை.

3 மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளன
ஜபருல்லாவும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் மரணம் தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை. கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு என 3 மாநிலங்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளதால், அன்புஜோதி ஆசிரம வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications