ஏ.சி.சண்முகத்துக்கு ஆபரேஷன்.. மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த அண்ணாமலை!
சென்னை: புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வரும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்தை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், ஏ.சி.எஸ். குழுமத் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் ஆகியோரும் உடனிருந்தனர். தற்போது இதுதொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஏ.சி. சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். எனினும் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். 3 லட்சத்து 52, 990 வாக்குகள் பெற்று ஏசி சண்முகம் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications