"துபாய் ஹோட்டல்".. அண்ணாமலை என்ன பேசினார் தெரியுமா? புட்டு புட்டு வைத்த காயத்ரி.. சுளீர் அட்டாக்!
சென்னை: காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு காயத்ரி ரகுராம் தற்போது பதில் அளித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காயத்ரிக்கும் அண்ணாமலைக்கு இடையில் நேரடியாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பாஜகவில் இருந்தும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். நேற்று கூட அண்ணாமலை - ரபேல் வாட்ச் விவகாரத்தில் காயத்ரி கருத்து தெரிவித்து இருந்தார். அண்ணாமலை பற்றி பொய்யான செய்தி பரவினால் உங்களுக்கு அது வலிக்கிறது. அதுவே அண்ணாமலை என்னை பற்றி பொய் சொன்னால், துபாய் ஹோட்டலில் இருந்ததாக பொய் சொன்னால், 150 பேருக்கு முன் என்னுடைய கேரக்டரை அவமானப்படுத்தினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையா? இதை பல செய்தி நிறுவனங்கள் வேறு வெளியிட்டு இருந்தன.

பிணந்தின்னி
என்னை பிணந்தின்னி கழுகுகளிடம் வீசி எறிந்தனர். எனக்காக பாஜகவில் யாரும் நிற்கவில்லை. ஒரு பெண்ணுக்காக யாரும் நிற்கவில்லை. ஒரு சின்ன விசாரணை கூட நடத்தவில்லை. பாஜக வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலைவர் தனது கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினரை பற்றியே தவறாக பேசுகிறார். கடைசி 8 வருடங்களில் நான் இப்படி ஒரு பிரச்னையை எதிரிகொண்டதே இல்லை. இப்போது நானும், என் குடும்பமும் கடும் வலியில் இருக்கிறோம். முன்பெல்லாம் பெண்கள் அமைதியாக ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் அப்படி இருக்க கூடாது, என்று கூறினார்.

நீக்க வேண்டும்
இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள், அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும். கட்சியில் இருக்க கூடாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அண்ணாமலைக்கு எதிராக வெளிப்படையாக பேசும் இவர் கட்சியில் நீடிக்க கூடாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலை என்னை விசாரணையே இன்றி சஸ்பெண்ட் செய்துள்ளார். என்னுடைய கேரக்டரை அழிக்கும் விதமாக, அவமானப்படுத்தும் விதமாக அவர் பேசினார்.

பதிலடி
என்னை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று பிராண்ட் செய்தனர். நான் இந்த கட்சியை விட்டு வெளியேறவில்லையே? அவர்கள் தானே சஸ்பெண்ட் செய்தனர்? நான் என்னுடைய முதுகை யாருக்கும் காட்டவில்லையே? நான் தவறுகளுக்கு எதிராக நிமிர்ந்து நின்றேன். நான் தொடர்ந்து பாஜகவிற்காக உழைப்பேன். ஏனென்றால் எனக்கு மோடி பிடிக்கும். எனக்கு இந்த தேசம் பிடிக்கும். மூத்த தலைவரோ, சிறிய தலைவரோ யாராக இருந்தாலும் பெண்களை அசிங்கப்படுத்தும் நபர்களுக்கு எதிராக, நான் நிற்கிறேன். எல்லோரும் ஒரே விதிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மோதல்
பாஜகவின் வளர்ச்சிக்காக எனது பணியைத் தொடர்வேன். தேசத்திற்கு சேவை செய்வதுதான் எனக்கு அமைதியை கொடுக்கிறது என்று காயத்ரி கூறியுள்ளார். இன்னொரு போஸ்டில் ஹனிடிராப் செய்வது தவறு. அது தொடர்பான வீடியோக்களை வெளியிடுவதும் சரியான அரசியல் கிடையாது என்று பாஜகவில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு காயத்ரி ரகுராம் கிளாஸ் எடுத்துள்ளார். மூத்த தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலை ஹனிடிராப் செய்து வீடியோ வைத்து இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில்தான் காயத்ரி ரகுராம் ஹனி டிராப் செய்வது தவறு என்று கூறியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications