நெஞ்சுவலினு படுக்கமாட்டோம்.. DMK files பார்ட் 2ல் அதிமுகவில் இருந்து போனவர்களே அதிகம்: அண்ணாமலை பரபர
சென்னை: எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம். DMK Files பார்ட் 2 ரெடியாக இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு 8 வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கு: இதற்கிடையே திமுக எம்.பியும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் கடந்த மே 12ஆம் தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வரும் தான் எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளதாகவும்ம் தனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக, களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
பொய்யான குற்றச்சாட்டை கூறி தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் டி.ஆர்.பாலு. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஜூலை 14-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார் அண்ணாமலை.
அண்ணாமலை மீண்டும் ஆஜராக உத்தரவு: அண்ணாமலை ஆஜராவதை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டம் சேர்ந்தது. இன்று விசாரணையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்று மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஆகஸ்ட் 24ஆம் தேதி மறுபடியும் இங்கு ஆஜராவோம். டிஆர் பாலுவின் குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோருவோம். டிஆர் பாலு உட்பட அனைவரும் கூண்டில் ஏற வேண்டும்.
நெஞ்சு வலி என ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகமாட்டோம்: எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம். எல்லா நாளும் நான் இங்கு இருப்பேன்.
தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. அவர்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது. எங்களிடம் ஒன்றும் இல்லை, மக்கள் சக்தி மட்டும் தான் துணை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்தார்.
DMK Files பார்ட் 2: மேலும், பாதயாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். பார்ட் 2ல் பினாமிகள் பெயரே 300 பேருக்கு மேல் வருகிறது. பினாமிகளின் பெயர்களை பொதுவெளியில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் கொடுப்பதா என ஆலோசித்து வருகிறோம்.
DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும். DMK Files பாகம் 1 வெளியிட்டதால் திமுகவினருக்கு என் மீது கோபம் என அண்ணாமலை தெரிவித்தார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications