இதை வச்சு குதிரைபேரம் நடத்த திட்டமா? முதல்வர் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்! அண்ணாமலை வெளியிட்ட வீடியோ!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வருக்கு சில கேள்விகள் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் ஒரு டெல்டாக்காரன் என மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் காவிரி விவகாரத்தில் வாய் திறக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கமுடியாது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், காவிரியில் ஜூலை மாதத்திற்கான நீரை திறந்துவிட கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்தக் கோரி தமிழ்நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக இன்று டெல்லிக்கு செல்கிறார்.
இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக இருப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். டெல்டாக்காரன் என பாவித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஏன் இதுவரை கர்நாடக துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?
கூட்டணியாயிற்றே என்ற பாசமா? இதை வைத்து நாடாளுமன்ற இருக்கைகளுக்கு குதிரை பேரம் பேசலாம் என்ற நோக்கமா? மக்கள் எப்படிப் போனால் எனக்கு என்ன என்ற அலட்சியமா? இல்லை தான் ஒரு முதல்வர் என்பதையே மறந்து விட்டாரா? டெல்டாக்காரன் என பெருமையாக சொல்லிவிட்டு டெல்டா மக்களுக்கான உரிமை பறிபோகும்போது வாய் மூடி இருப்பது நியாயம் தானா?" என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு, கர்நாடகா இடையிலான நதி நீர் பிரச்சினையில் திமுக அரசியல் செய்து வருகிறது. காவிரி பிரச்சினையில் கர்நாடக பாஜக எந்த அரசியலும் செய்யவில்லை. தற்போது காவிரியில் இருந்து இந்த ஆண்டு தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் தமிழ்நாடு பெரும் பாதிப்பை சந்திக்கும்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால், தன்னை அகில இந்திய அளவிலான தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதுகிறார். ஆனால், காவிரிப் பிரச்சனையில் கர்நாடக முதல்வர், துணை முதல்வரைக் கண்டிக்கவோ, காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கவோ முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை என அண்ணாமலை விமர்சித்தார்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications