முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க..மற்ற அமைச்சர்களும் பிளான் பண்ணிட்டாங்களா? சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை!
சென்னை: மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரியாக்ட் செய்துள்ளார். முதல்வரின் அக்கறை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு காரணமாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் இந்தக் கடிதததைக் குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சந்தேகம் எழுப்பியுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் எக்ஸ் பதிவை பகிர்ந்து, அது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டிற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியவர் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி என்பதை நினைவூட்டியிருக்கும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துகிறோம்.
கடந்த ஆண்டு, திமுக எம்.பி டிஆர் பாலு, தமிழ்நாடு 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்றதாகக் கூச்சலிட்டார். தி.மு.க 6-வது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தும், வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளது. இது தான் உங்கள் சாதனை. தயவுசெய்து முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள்.
சந்தேகத்திற்கு இடமின்றி, தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு திமுகவின் பங்களிப்பு மிகக் குறைவு. இதில் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினின் பங்களிப்பு என்பது சமீபத்தில் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் தனியார் மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தது மட்டுமே.
தமிழக முதல்வரின் இந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை, மற்ற திமுக அமைச்சர்களும் புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசு தனது கடந்த கால பெருமைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications