கோவையில் ஷாக் கொடுத்த எக்ஸிட் போல்.. 4ம் தேதி என்ன நடக்குது பாருங்க.. அண்ணாமலை கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை லோக்சபா தொகுதியில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவின் கணபதி ராஜ்குமாரே வெற்றி பெறுவார் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கிறது என்றும், ஜூன் 4 ஆம் தேதி என்ன நடக்கிறது பாருங்கள் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அண்ணாமலை ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்றுடன் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தன. இதில் பாஜக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று 3 வது முறையாக மோடி ஆட்சி அமைப்பார் என்றே கணித்துள்ளன.

coimbatore lok sabha election 2024 bjp congress 2024


இந்தியா டுடே மை ஆக்சிஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், 361 முதல் 401 இடங்களை பாஜக பிடிக்க வாய்ப்புள்ளது என்றும், 131 முதல் 166 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் திமுக கூட்டணியே 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பாஜக 0 முதல் 3 இடங்களும், அதிமுகவுக்கு 0 - 3 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன.

இதில் தமிழ்நாட்டில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான கோவையில் திமுகவின் கணபதி ராஜ்குமாரே வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளன. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறங்கியுள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்று பலரும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் திமுகவின் கணபதி ராஜ்குமார் ஜஸ்ட் மிஸ்சில் அண்ணாமலையை தோற்கடிப்பார் என்று தெரிவித்துள்ளன. அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் 2ஆம் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அண்ணாமலை 3 ஆம் இடத்தை பிடிக்க தான் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன.

தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், கோவையில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளை பெறுவார் என்றும், அதிமுக சிங்கை ஜி. ராமச்சந்திரன் 31 % வாக்குகளை பெறுவார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 30.5% வாக்குகளை பெறுவார் என்று தெரிவித்து உள்ளது.

பெரும்பாலானா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் அண்ணாமலைக்கு பின்னடைவு ஏற்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை தொகுதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிராகரித்துள்ள அண்ணாமலை, 4ஆம் தேதி உங்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், "4 ஆம் தேதி உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம். எளிதாக வெற்றி பெறுவோம். ஒட்டுமொத்தமாக பிரதமர் மோடி மீண்டும் அபார வெற்றியுடன் ஆட்சி அமைப்பார். என்று கூறியுள்ளார்.

கோவையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி ஆர் நடராஜன் இங்கே 571,150 வாக்குகள் பெற்று வென்றார். பாஜக சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் இங்கே 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் கல்யாண் சுந்தரம் 60,519 வாக்குகள் வென்றார்.

கடந்த 10 லோக்சபா தேர்தல்களில் இங்கே காங்கிரஸ் 3 முறை, திமுக 1 முறை, சிபிஎம் 2 முறை, பாஜக 2 முறை, சிபிஐ 1 முறை, அதிமுக 1 முறை வென்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+