அமர் பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பாஜகவுக்கு நல்லது தானாம்.. அண்ணாமலை சொல்றதை பாருங்க!
சென்னை: பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது பாஜகவிற்கு நல்லது தான் என்றும், பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதில் போலீசார், பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
இந்நிலையில், ஜேசிபியின் கண்ணாடி உடைத்த வழக்கில், கன்னியப்பன், பாலமுருகன், செந்தில் குமார், சுரேந்திர குமார், வினோத்குமார் ஆகியோரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர். பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 6 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டது பாஜகவிற்கு நல்லது தான். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும். ஒன்று தானாக வளர்ந்து வருவது, இன்னொன்று மற்றொரு கட்சி அந்த கட்சியை வளர்த்து விடுவது. தமிழகத்தில் நேர்மையான ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக-வால் மட்டுமே தரமுடியும்.
பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அதிக உதவிகளைச் செய்து வருகிறது.இது போன்ற சம்பவங்களை சந்திக்கும் போது தான் ஒரு தொண்டன் தலைவனாக வர முடியும். சென்னையில் எத்தனை திமுக கொடி கம்பங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர்? நவம்பர் 1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றே கொடிக்கம்பங்கள் நடப்படும்.
சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள். ஆனால் கொடிக்கம்பங்களை தாமதமாக வைத்து வந்த தொண்டர்கள் இதன் பிறகு துரிதமாக வைப்பார்கள். ஆக, திமுக அரசின் இந்த செயல் எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு இன்னும் வேகமும், உத்வேகமும் அளிக்கிறது.
திமுக தங்களின் நம்பர் ஒன் எதிரியாக பாஜகவை பார்க்க ஆரம்பித்துள்ளது. பாஜகவும் எங்களுடைய நம்பர் ஒன் எதிரியாக திமுகவை பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எனவே, தேர்தல் களத்தில் சந்திப்போம். அதுவரை சண்டை சச்சரவுகள் நடக்கத்தான் போகிறது. இவை ஜனநாயக அரசியலில் தவிர்க்க முடியாத விஷயங்கள். பாஜக தொண்டர்கள் இன்று 13 பேர் சிறையில் உள்ளனர். அதில் 6 பேர் அந்த கொடிக்கம்ப வழக்கில் சிறையில் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?












Click it and Unblock the Notifications