Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி போட்ட "பலே" பிளான்! புரிந்துகொள்ளாத அண்ணாமலை! ஓ சிவி சண்முகம் இதுக்குத்தான் அப்படி பேசினாரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார். அந்த திட்டத்தை அண்ணாமலை புரிந்துகொள்ளவில்லை. அண்ணாமலை இதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீபத்தில் பேசிய சி வி சண்முகம், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள்.

விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார்.

அண்ணாமலை பதிலடி

அண்ணாமலை பதிலடி

இந்த நிலையில்தான் சிவி சண்முகத்தை விமர்சனம் செய்துள்ள அண்ணாமலை கடுமையாக தாக்கி உள்ளார். நான் இன்னும் சென்னை பாஜக ஆபிஸ் செல்லவில்லை. சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என்ன? நான் போய் பார்க்கவில்லை. பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் பாஜகவில் இருக்க வேண்டும். அவர் என்ன பாஜகவில் இருக்கிறாரா? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச அந்த கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். யாரோ 3ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பாஜகவின் கூட்டணி பற்றி பேசலாமா. அவர் பாஜகவின் கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் ஒன்று பாஜகவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

பேட்டி

பேட்டி

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு..

கேள்வி: சிவி சண்முகம் திமுக + பாஜக கூட்டணி பற்றி பேசியதற்கு அண்ணாமலை விமர்சனம் வைத்து இருக்கிறாரே?

பதில்: அண்ணாமலை சிவி சண்முகத்திற்கு ஆற்றிய எதிர்வினை சரியானதுதான். அதிமுக தனித்து போட்டியிடும் என்று சிவி சண்முகம் வேண்டுமானால் சொல்லலாம். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்காது என்று கூட சிவி சண்முகம் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் சொல்ல சிவி சண்முகத்திற்கு தெம்பு இல்லை, திராணி இல்லை, வக்கு இல்லை. இதை பற்றி சொல்லாமல் திமுக + பாஜக கூட்டணி வைக்க போவதாக சிவி சண்முகம் சொல்கிறார். இதை சொல்ல சிவி சண்முகம் யார்? அரசியல் விமர்சகரா?

 பாஜக பற்றி பேச்சு

பாஜக பற்றி பேச்சு

அதிமுகவில் இருப்பவர் அதிமுக கூட்டணி பற்றி பேசலாம். இல்லை பாஜகவில் இருந்து கொண்டு பாஜக கூட்டணி பற்றி பேசலாம். ஆனால் அதிமுகவில் இருந்து கொண்டு எப்படி அவர் திமுக + பாஜக கூட்டணி பற்றி பேசலாம். அவர் என்ன அரசியல் விமர்சகரா மற்ற கட்சிகளின் கூட்டணி பற்றி பேசுவதற்கு. தைரியம் இருந்தால் அதிமுக + பாஜக கூட்டணி இல்லை என்று சொல்ல முடியுமா? சிவி சண்முகம் சொல்லும் பாணியிலேயே சொல்கிறேன். அவருக்கு தெம்பு, திராணி, வக்கு இல்லை. அதனால் இப்படி எல்லாம் திமுக + பாஜக கூட்டணி பேசுகிறார்.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

கேள்வி: தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்ப்பது போல சிறுபான்மையினரை கவர்ந்து மறுபுறம் டெல்லியில் பாஜகவுடன் நல்ல உறவை பேணிக்காக்க எடப்பாடி திட்டமிடுகிறாரா?

அப்படி செய்தால் அவருக்குத்தான் சிக்கல். எல்லோரும் அவரை கைவிட்டுவிடுவார்கள். அவர் 15% வாக்குகளை தாண்ட மாட்டார். இதுதான் நடக்க போகிறது. நிச்சயமாக பாருங்கள் எடப்பாடிக்கு ஜாதி ஆதரவு இல்லை. முக்குலத்தோர் ஆதரவு அவருக்கு இல்லை. தேவேந்திர குல வேளாளர் ஆதரவு இல்லை. வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட மற்ற சாதியினர் எடப்பாடிக்கு எதிராக உள்ளனர். சிறுபாண்மையினர் மட்டுமில்லை, பல்வேறு ஜாதியினரும் எடப்பாடிக்கு எதிராக உள்ளனர். முன்பு ஓ பன்னீர்செல்வம் இருந்ததால் எடப்பாடி 60 + இடங்களை எடுத்தார்.

குஜராத் பிளான்

குஜராத் பிளான்

ஆனால் இப்போது ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் எடப்பாடியால் எதுவும் செய்ய முடியாது. எல்லோரையும் தட்டிவிட்டு தனியாக நிற்கலாம். ஜெயலலிதா போல ஆகலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். அது நடக்காது. இப்போது சிவி சண்முகம் பேசியது எடப்பாடி சொல்லி பேசியதுதான். சிவி சண்முகத்தை எடப்பாடிதான் இப்படி பேச சொல்லி இருக்கிறார்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பாஜக கூட்டணியில் இருந்தால் 2026ல் வெற்றிபெற முடியாது. ஆட்சியை பிடிக்க முடியாது என்று எடப்பாடி நினைக்கிறார். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகள் காரணமாக பாஜகவை கட் செய்ய எடப்பாடி நினைக்கிறார். அதேபோல் அண்ணாமலை வளர்ந்துவிடுவார் என்றும் எடப்பாடி இப்படி பாஜக கூட்டணியை உடைப்பார். ஆனால் அண்ணாமலை இதை புரிந்து கொள்ளவில்லை. எடப்பாடி பற்றி அண்ணாமலை புரிந்துகொள்ளவில்லை. எடப்பாடியின் இந்த எண்ணத்தை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாமலை எடப்பாடி

அண்ணாமலை எடப்பாடி

குஜராத்தில் ஓபிஎஸ் என்ன பேசி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

இந்த சந்திப்பில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரு முக்கியத்துவத்தை மோடி கொடுக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தங்களுக்கு ஆதரவாக இருப்பார். தாங்கள் சொன்னதை செய்வார் என்று மோடி நம்புகிறார். அதனால் அவரை எடப்பாடி வர வைத்தார். எடப்பாடி வரவில்லை என்பதை பற்றி கண்டிப்பாக யோசித்து இருப்பார்கள். எடப்பாடி பக்கம் பவர் புல் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர் பக்கம் 90% கட்சி இருக்கிறது. ஆனால் அவரிடம் வாக்கு வங்கி இல்லை. எடப்பாடியிடம் 15 சதவிகித வாக்குகள் மட்டுமே இருக்கிறது என்று ரவீந்திரன் துரைசாமி ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+