Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியில்லையே.. வானதி + அண்ணாமலை + அமர்.. தமிழ்நாடு பாஜகவில் ஏகப்பட்ட குழப்பம்? டெல்லி போட்ட உத்தரவு

அண்ணாமலையின் கேம் பிளான் என்ன என்று தெரியாமல் பல மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்களாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவிற்குள் என்ன நடக்கிறது.. அதிமுகவுடன் உரசல் ஏன் என்று தெரியாமல் பல மூத்த நிர்வாகிகளே குழம்பிப் போய் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிமுக பாஜக இடையிலான கூட்டணியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் கடந்த சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்தது.

அதன்படி பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசினார். மிகவும் காட்டமான கருத்துக்களை அண்ணாமலை வைத்ததாக கூறப்படுகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை

அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

அண்ணாமலை

அண்ணாமலை

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

வானதி

வானதி

அண்ணாமலை பேசிக்கொண்டு இருக்கும் போதே குறுக்கிட்ட வானதி சீனிவாசன், இது பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தானே. கூட்டணி குறித்து ஆலோசனை செய்யும் கூட்டம் இல்லையே. நமது கட்சியில் கூட்டணி முடிவுகளை தேசிய தலைமை தானே முடிவு எடுக்கும். நமது கட்சி தேசிய கட்சி என்பதை மறக்க வேண்டாம், தேசிய தலைமை சொல்வதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். இந்த பிரச்னையை இங்கே பேச வேண்டியதே இல்லையே. அது இப்போது சப்ஜெக்ட் இல்லையே. மாநில கோர் கமிட்டி மையக் குழு கூட்டம் நடக்கும்போது தானே இதை பேச வேண்டும். ஏன் இப்போது பேசுகிறீர்கள் , என்று கூறி இருக்கிறாராம். இதனால் பாஜக கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி

இந்த நிலையில் பாஜக - அதிமுக மோதல் குறித்து போஸ்டுகளை செய்த அமர் பிரசாத் ரெட்டி , தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்க தான் தன் ஐபிஎஸ் பதவியை விட்டுட்டு தமிழகத்துக்கு வந்தவர் தலைவர் அண்ணாமலை அவர்கள்.ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கனவு. ஒரு நாளும் ஊழலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சூரியன் திசை மாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவது இல்லை. 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி நிச்சயம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை பேட்டி

அண்ணாமலை பேட்டி

இதையடுத்து நேற்று பேசிய அண்ணாமலை, எந்தக் கட்சிக்கும் எதிராக நான் இல்லை. எல்லாக் கட்சிகளுமே அவர்களுடைய பயணத்தில் அவர்களுக்கு எது சரி என்று நினைக்கிறார்களோ.. அரசியல் செய்கிறார்கள். அவர்கள் அரசியல் செய்வது தப்பு என்று சொல்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. மிகப்பெரும் அரசியல் மாற்றத்திற்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். நேர்மையான அரசியலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு காத்திருக்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்களிடம் நான் பேசி வருகிறேன், என்று கூறினார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

இந்த நிலையில்தான் பாஜகவில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளே குழம்பிப் போய் இருக்கிறார்களாம். மேல்மட்ட தலைவர்களுக்கு இடையே என்ன மோதல் என்று தெரியாமல் பல நிர்வாகிகள் குழம்பிப் போய் இருக்கிறார்களாம். மூத்த எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தமிழ்நாடு பாஜக விவகாரங்களில் தலையிடுவதே இல்லையாம். தலைமையுடன் இருக்கும் கசப்பான உறவு காரணமாக அவர் மாநில விவகாரங்களில் தலையிடுவதே இல்லையாம். அதே சமயம் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கூட்டணியை முடிவு செய்யும் தேசிய கமிட்டியில் அவர் இருப்பதால், அந்த பவரை பயன்படுத்தி கூட்டணியை உறுதிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம்.

கேம் பிளான்

கேம் பிளான்

இன்னொரு பக்கம் அண்ணாமலையின் கேம் பிளான் என்ன என்று தெரியாமல் பல மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்களாம். தேசிய தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும் என்று நேற்று அண்ணாமலை கூறினார். ஆனால் நேற்று அவர் பேசுகையில், வாக்கிற்கு பணம் கொடுக்கும் கட்சிகள் பின் செல்ல கூடாது. பிறரை சார்ந்து இருக்க கூடாது. நேர்மையான அரசியல் செய்ய வேண்டும் என்று பேசினார். இரண்டு திராவிட கட்சிகளையும் தாக்கி பேசுவது போல கருத்துக்களை சொன்னார். அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் விருப்பத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்பதே தெரியாமல் சில நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனராம்.

குழப்பம்

குழப்பம்

தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அண்ணாமலை பதவிக்கு ஆபத்து என்றும் சில நிர்வாகிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ.. அண்ணாமலை பதவிக்கு ஆபத்து இருக்காது. அவரை சுற்றித்தான் கட்சியின் இமேஜை உருவாக்கி உள்ளனர். அவரை தூக்கினால் இத்தனை நாள் மேற்கொண்ட உழைப்புகள் எல்லாம் வீணாகிவிடும் என்று கூறி இருக்கிறார்களாம். இந்த விவகாரத்தில் டெல்லியும் இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிமுக கூட்டணி விவகாரத்தில் பின்னர் முடிவு எடுக்கலாம். முதலில் உட்கட்சி மோதலை சரி செய்யுங்கள். உட்கட்சி மோதலை வேகமாக முடிவிற்கு கொண்டு வாருங்கள் என்று டெல்லி தரப்பில் இருந்தும் உத்தரவு போடப்பட்டு உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+