Vijay: பிரசாந்த் கிஷோர் நிலைமையை பாருங்க! பாஜகவை எதிர்த்தீங்கன்னா! விஜய்க்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: தவெக தலைவர் விஜய் பாஜகவை எதிர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்திருந்தால் பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கு ஏற்படும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

243 தொகுதிகளுக்கு பீகார் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் மற்றும் மாநில கட்சிகள் போட்டியிட்டன.
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பாஜகவும், ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம்) ஆகிய கட்சிகள் தலா 101 இடங்களில் போட்டியிட்டன.
அது போல் மகா கூட்டணியில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும், ஆர்ஜேடி கட்சி 143 இடங்களிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று பீகாரில் வரலாற்றுச் சாதனை படைத்தது. அதாவது இரட்டை சென்சுரி அடித்துள்ளது.
காங்கிரஸ் + ஆர்ஜேடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. அது போல் தேர்தலுக்கு வியூகங்களை வகுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தது.
பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த பி.கே. மிக மோசமான வகையில் தோல்வி அடைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய விஜய்யும் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக வைத்திருந்தார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு அவரது அமைப்பை வைத்து வியூகங்களை வகுக்கும் பணிகளை ஒப்படைக்கலாமா என இருந்தார்.
ஆனால் அவரது கட்சியே படுதோல்வி அடைந்த நிலையில் பாஜகவை எதிர்த்தால் விஜய்க்கும் இதே நிலைதான் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அரசியலில் எதிர்ப்பதை மட்டுமே பார்ப்பதில்லை என விஜய்க்கு அறிவுரை சொல்ல விரும்புகிறேன்.
விஜய்யும் தவெகவும் பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம்தான் நடத்துகிறது. ஆனால் இதை பாஜகவுடன் தொடர்புப்படுத்தி விஜய் விமர்சித்து வருகிறார். பாஜக எதை செய்தாலும் எதிர்க்கிறார்கள். வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டும் கொண்டிருந்தால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.
நீங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்ன செய்வீர்கள், என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைதான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். பாஜகவை எதிர்ப்பதையே வேலையாக வைத்திருந்தால் தோல்விதான் கிடைக்கும். விஜய்யும் எதிர்க்கும் மனநிலையில்தான் இருக்கிறார். அதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை தொடங்கி 3.55 சதவீத வாக்குகளை பெற்றார். 238 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பிரசாந்த் கிஷோர் நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி, ஆட்சி மாற்றம் தேவையில்லை என்றால் மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே கட்சியை ஆரம்பித்துவிட்டேன் என்பதற்காகவே பாஜகவை எதிர்த்தால் அது சரியான நடைமுறையாக இருக்காது. எந்த தவறையும் செய்யாத பாஜகவை, தவெக உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கிறார்கள்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications