அண்ணா நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
சென்னை: அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
அண்ணாவின் 57 ஆவது நினைவு நாளானது இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அண்ணாவின் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ. ராசா மற்றும் கட்சியினா் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications