அண்ணாத்த நடிகையின் துயரம்.. முகமெல்லாம் காயம்! மாமனார் மீதே பாலியல் புகார் - பேத்தி என்றும் பாராமல்
சென்னை: மாங்காடு அருகே மாமனாரும் மாமியாரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக துணை நடிகை சிவரஞ்சனா காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார்.
Recommended Video
ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சிவரஞ்சனா.
இவர் சென்னை போரூர் பகுதியில் கணவன், அவரது தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

போலீஸ் புகார்
இந்த நிலையில் அவர் சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73) மற்றும் மாமியார் தன்னை அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

முகம் முழுவதும் காயம்
இது குறித்து மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று துணை நடிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எனது கணவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனது மாமனார் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

பலத்த காயம்
மாமியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு என்னை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

போக்சோவில் வழக்கு
இந்த நிலையில் தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சரவணவேல் மீது போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவரஞ்சனா புகாரளித்தார். அதன் அடிப்படையில் துணை நடிகையின் மாமனார் சரவணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் சரவணவேலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications