லீவு முடிஞ்சி கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்கு இனி கவலை இல்லை! தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பு
சென்னை: தீபாவளி விடுமுறை முடித்து சென்னை திரும்பும் பணிகளுக்கு வசதியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பொத்தேரி ரயில் நிலையத்திலிருந்த அதிகாலை முதலே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னையின் மக்கள் தொகை நெருக்கி 2 கோடியாக இருக்கிறது. இதில் ஏறத்தாழ சரிபாதிபேர் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். இம்மக்களில் பெரும்பாலானோர் பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இந்த தீபாவளி பண்டிகைக்கும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் சுடா் 3.41 லட்சம் பேர் பயணித்துள்ளனர். பயணிகளுக்காக ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதாவரம் என மூன்று முனைகளிலிருந்து தீபாவளிக்காக மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள்+வழக்கமான பேருந்துகள் என மொத்தம் 4932 பேருந்துகள் இந்த நாட்களில் இயக்கப்பட்டிருக்கின்றன. இந்த பேருந்தில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். இவ்வாறு பயணித்த மக்கள் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்ப இருக்கின்றனர்.
சென்னைக்குள் வரும் மக்கள் சிக்கல் இல்லாம் வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சென்னைக்குள் வரும் வாகனங்கள், ஒரே பாதையில் உள்ளே வராமல், வெவ்வெறு பாதைகளில் உள்ளே வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். அதேபோல, கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னைக்குள் வருவதறக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கிளாம்பாக்கம் வரும் பயணிகள் சென்னை சிடிக்குள் வர, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பொத்தேரி ரயில் நிலையத்தில், புறநகர் ரயில்கள் கூடுதல் நேரம் நின்று செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்திலிருந்து பொத்தேரி ரயில் நிலையைம் வழியாக தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் திங்கள்கிழமையன்று அதிகாலை மணி முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாலை 4 மணிக்கு முதல் ரயிலும், 4.30, 5, 5.45, 6.20 என ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications