கல்யாணம் ஆன அன்னிக்கே குழந்தை பொறக்குமா? பொன்முடி டிஸ்சார்ஜ்.. கல்யாணசுந்தரம் அட்மிட்! தலைவலி திமுக!
சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் திமுகவுக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்பி கல்யாணசுந்தரம் திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் நடந்த அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் வேறு விதமாகத்தான் பிறக்கும் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் கண்ணியமாக பேச வேண்டுமென நேற்று தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது இவரது பேச்சால் சர்ச்சை எழுந்திருக்கிறது.
அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், பெண்களையும் சைவ மற்றும் வைணவ சமயங்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

அப்போது அமைச்சர் பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக 5 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, நான்கைந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீர்த்துப் போக செய்யாமல் ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, அமைச்சர் பொன்முடி எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பொன்முடியின் பேச்சு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அவர் சொல்லி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கி இருக்கிறார் திமுக எம்பி கல்யாணசுந்தரம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர்," அனைவருக்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதம் பொறுத்து இருந்தால் தான் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் முடித்த உடனேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் வேறு விதமாகத்தான் பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் மட்டும் தான் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும்.
எனவே ஆத்திரப்பட்டு கோபப்பட்டு திட்டி பேசுவதால் நல்ல விஷயங்கள் நடக்காது. அவர்களிடம் பேசுவது போல் பேசி அனுசரித்து தான் வேலை வாங்க வேண்டும் என கூறியிருந்தார். அமைச்சர் பொன்முடியின் பேச்சால் ஏற்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில் தற்போது எம்பி கல்யாண சுந்தரத்தின் பேச்சு திமுக நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மேலும் அவரது பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதிமுக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications