கட்டம் கட்டுதே.. கட்டம் போட்டு காண்பித்த தமிழ்நாடு வெதர்மேன்.. வெளியிட்ட முக்கிய வானிலை எச்சரிக்கை
சென்னை: சென்னையில் நிலவி வரும் மோசமான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.

எச்சரிக்கை : இந்த நிலையில் சென்னையில் நிலவி வரும் மோசமான வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
அதில், சென்னையில் மீண்டும் இன்று அதிகாலை கடல் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரின் மேற்கு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் தொடர்ந்து சூடாக இருக்கும். ஏனென்றால் கடல் காற்று அங்கு செல்ல நேரம் எடுக்கும்
இதனால் அந்த பகுதிகள் சூடாக இருக்கும். 40டிகிரி செல்ஸியஸ் பின்வரும் மாவட்டங்களில் பதிவாகி உள்ளது. கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை மற்றும் து.மலையின் சில பகுதிகள், தூத்துக்குடியின் சில பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள்.
சென்னை, வேலூர், திருத்தணி பெல்ட் & கரூர் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகள் சூடான பகுதிகளின் லிஸ்டில் அதாவது ஹாட் சார்ட்களில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.

கட்டம் கட்டுது : மேலும், நேற்று இருந்ததை போலவே, சென்னை வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸைத் தொட்ட பிறகு கடல் காற்று சென்னை நகருக்குள் செல்லத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் சென்னை நகரின் மேற்குப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானிலை உக்கிரமடைந்து வருகிறது. இந்த பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை நோக்கி இன்று செல்லக்கூடும். (கடல் காற்று வரக்கூடிய நிலையை கட்டம் போட்டு காண்பித்துள்ளார்.
கடலுக்கு அருகில் உள்ள பகுதிகள் கடல் காற்றை அனுபவித்து வருகின்றன. ஆனால் அதே வேளையில், அம்பத்தூர், கொளத்தூர், அண்ணாநகர் வெஸ்ட், போரூர், மொகப்பேர் போன்ற நகரத்தின் மேற்குப் பகுதிகள் அனைத்தும் கடுமையான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன.
மதியம் 1.30 மணிக்கு வெப்பநிலை
கடல் காற்று வீசும் பகுதிகள் இல்லாமல் மற்ற பகுதிகள்
----------
வானகரம் (ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி) 40.7 டிகிரி செல்ஸியஸ்
தாம்பரம் (SIT) 40.1டிகிரி செல்ஸியஸ்
செம்பா 39.9 டிகிரி செல்ஸியஸ்
திரூர் 39.4 டிகிரி செல்ஸியஸ்
வில்லிவாக்கம் / அண்ணாநகர் மேற்கு 39.1 டிகிரி செல்ஸியஸ்
பொத்தேரி 38.6 டிகிரி செல்ஸியஸ்
கடல் காற்று வீசும் பகுதிகள்
----
எண்ணூர் 31.7 டிகிரி செல்ஸியஸ்
எம்ஆர்சி நகர் 32.6 டிகிரி செல்ஸியஸ்
நந்தனம் 33.7 டிகிரி செல்ஸியஸ்
தரமணி 34.1 டிகிரி செல்ஸியஸ்
நுங்கா 34.9 டிகிரி செல்ஸியஸ்
மாதவரம் 35.1 டிகிரி செல்ஸியஸ்
என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications