மொத்தமாக கட்சியை மீட்க போறோம்.. டெல்லி தந்த சிக்னல்.. விக்கித்து நிற்கும் தமிழக தலைகள்.. என்னாச்சு?
சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், பாசிச பாஜகவை எதிர்த்தும், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் நேற்று ( 4-ந்தேதி) சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, தமிழக காங்கிரசின் சொத்துப் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டதன் பேரில் இந்த ஆலோசனைக்கு திட்டமிடப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சொத்துப்பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் விஜய் இந்தர் சிங்காலா வந்திருந்தார்.

இவரது தலைமையில் தான் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் தலைவர் தங்கபாலுவை தலைவராக கொண்டு அமைக்கப்பட்ட தமிழக காங்கிரசின் சொத்துப்பாதுகாப்பு கமிட்டியில் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் என 31 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
கூட்டம்
காலை 11 மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் சீனியர் உறுப்பினர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் காமராஜர் அரங்கத்துக்கு வந்துவிட்டனர். ஆனால் கூட்டம் தொடங்கப்படவில்லை. மாறாக, செல்வப்பெருந்தகையும் தங்கபாலுவும், விஜய் இந்தர் சிங்காலாவை அழைத்துக்கொண்டு தனியாக ஒரு ரகசிய மீட்டிங்கை நடத்தினர். இந்த மீட்டிங் மதியம் 1 மணி வரை நீடித்துள்ளது.
இதனால் கடுப்பான சீனியர் உறுப்பினர்கள் பலர், 'ஆலோசனை கூட்டம்னு அழைச்சிட்டு உறுப்பினர்கள் இல்லாமல் தனியாக என்ன ரகசியக் கூட்டம் ?' என்று சத்தம் போட்டுவிட்டு, இதனை கண்டிக்கும் வகையில், அரங்கத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இந்த தகவல் செல்வப்பெருந்தகைக்கு தெரிய வர, உடனே ஓடோடி வந்து அவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்து அமர வைத்துள்ளார். அப்போது, செல்வப்பெருந்தகையிடம் சீனியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
என்ன சொன்னார்?
கூட்டத்தில் பேசிய விஜய் சிங்காலா, "தமிழகம் முழுவதும் காங்கிரஸுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. அவைகள் எல்லால் தனி நபர்களின் ஆக்ரமிப்பில் இருக்கிறது அதனை மீட்டு கட்சியின் சொத்துக்களாக முறைப்படி மாற்றப்பட வேண்டும். அந்த சொத்துக்களின் மூலம் வரும் வருவாயை கட்சி கணக்கில் வரவு வைக்க வேண்டும்" என்றிருக்கிறார். அப்போது பேசிய சீனியர் உறுப்பினர்கள் சிலர், "காங்கிரஸ் சொத்துக்கள் வெளி நபர்களிடம் இருந்தால் மீட்டுவிடலாம்.
ஆனா, பெரும்பாலான சொத்துக்கள் நம் கட்சிகாரர்களிடமே இருக்கிறதே? அதை எப்படி மீட்பது? மீட்க முடியுமா? இதற்கு ஒரு வழி நீங்கள் சொல்ல வேண்டும்" என்று கேட்டுள்ளனர். இந்த கருத்துக்கான ஆதரவு, கூட்டத்தில் பலமாக இருந்துள்ளது. உடனே,"கட்சிக்காரர்களிடம் இருந்தாலும் மீட்கப்பட வேண்டும். மீட்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் என் நாலெட்ஜ்க்கு கொண்டு வாருங்கள். அதுமட்டுமல்லாமல், எந்தெந்த சொத்துக்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருக்கிறது என லிஸ்ட் கொடுங்கள். மேலிடத்தில் நான் பேசுகிறேன்" என்று கேட்டுக் கொண்டார் விஜய் சிங்காலா.
காங்கிரசின் சொத்து மீட்பு விவகாரம் விரைவில் பெரிதாக வெடிக்கும் என்கிறது சத்தியமூர்த்தி பவன் தரப்பு
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications