ஒரே நாளில் 2ஆவது முறை... பிரிட்டனிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட.. 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
சென்னை: பிரிட்டன் நாட்டிலிருந்து இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. மேலும், பல பகுதிகளில் ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இந்நிலையில், கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ பல்வேறு உலக நாடுகளும் முன் வந்துள்ளன. அதன்படி பிரிட்டன் நாட்டிலிருந்து இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியா விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் பிரிட்டன் நாட்டிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டன. முன்னதாக, இன்று காலை 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு 5000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களை அனுப்பவுள்ளதாகப் பிரிட்டன் அறிவித்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications