தூங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை.. எதிர்க்கட்சிகளின் ஊழல்களை காப்பது தான் சமூக நீதியா?: அறப்போர் இயக்கம்
சென்னை: எதிர்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் சமூக நீதியா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? என அறப்போர் இயக்கம் காட்டமாக விமர்சித்துள்ளது.
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "500, 1000 என்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதை தவிர கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் செய்யாமல் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறது.

கடந்த 4 மாதங்களில் மொத்தமே 2 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதற்கு நூற்றுக்கணக்கான பேர் சீட்டை தேய்த்து கோடிக்கணக்கில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள 25 ஊழல் புகார்களில் வீரமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநரிடம் அனுமதி கேட்டு காத்திருப்பதை தவிர மற்ற புகார்களில் என்ன தான் விசாரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
முன்னாள் அமைச்சர் வேலுமணி கூட்டாளிகளுக்காக சென்னை கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்ட புகாரில் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட பிறகும் பல மாதங்களாக அந்த ஆவணங்களை தலைக்கு வைத்து குறட்டை விட்டுக் கொண்டு இருக்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா?
500, 1000 என்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதை தவிர கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் செய்யாமல் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறது.
— Arappor Iyakkam (@Arappor) January 4, 2024
கடந்த 4 மாதங்களில் மொத்தமே 2 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுக்கு எதுக்கு… pic.twitter.com/z52fbSBGT5
ரேஷன் துறையில் கிறிஸ்டி நிறுவனம் மீது அறப்போர் கொடுத்த 2,000 கோடி ஊழல் புகாரை எப்பொழுது விசாரித்து முடிக்க போகிறீர்கள்? நிலக்கரி இறக்குமதியில் அதானி மற்றும் சில நிறுவனங்கள் செய்த 6,000 கோடி ஊழல் புகாரை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்? திமுக ஆட்சியில் தமிழக மின்சார துறையில் transformerகள் வாங்குவதில் டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டு 400 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட புகாரை எப்பொழுது விசாரிக்கப் போகிறீர்கள்?
திமுக ஆட்சி அமைந்து 3 வருடங்கள் முடிய இருக்கிறது. இது வரை அறப்போர் கொடுத்த புகார்களில் எதிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல புகார்களில் FIR கூட போடப்படவில்லை. பல முதல்கட்ட விசாரணை கூட துவக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது. இது தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திமுக ஆட்சியில் லட்சணமா? எதிர்க்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் உங்கள் சமூக நீதியா?
இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? இழுத்து மூடிவிட்டு தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்து விடலாமே..!" என காட்டமாகத் தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications