"டபுள் டமாக்கா".. அப்படியே சர்ரென மாறும் கிளாம்பாக்கம்.. பேருந்து நிலையத்தோடு வரும் புது வசதி! அருமை
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அந்த பேருந்து நிலையம் தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து பயணிகள் எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆனது.

புலி வருது கதையாக இந்த பேருந்து நிலையம் திறப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை முழுமையாக திறக்க முடியவில்லை. எடப்பாடி ஆட்சி காலத்தில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது இந்த பேருந்து நிலையம் முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டது உறுதி செய்யபட்டது.
பிரச்சனை: முக்கியமாக பேருந்து நிலையம் உள்ளேயே தண்ணீர் தேங்கும் பிரச்சனைகள் இருப்பதும் கண்டுபிடிப்பட்டது. கடந்த டிசம்பர் மழையில்தான் அங்கே தண்ணீர் தேங்கும் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபுவும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையத்தை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
முக்கிய செய்தி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அந்த பேருந்து நிலையம் தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்கும் திட்டத்தில் தென்னக ரயில்வே (எஸ்ஆர்) உள்ளது. இதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது.
டிபாசிட் அடிப்படையில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையத்திற்கு மண்டல பொது மேலாளர் ஒப்புதல் அளித்துள்ளார. இதன் கீழ் செலவை முழுமையாக தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 40 லட்சம் ரூபாய்க்கு முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு நிதி வழங்கி உள்ளது. சரியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே இந்த ரயில் நிறுத்தம் வரப்போகிறது. இங்கிருந்து விரைவில் மேல் பக்கம் நடந்து வரும் விதமாக நடைமேடை அமைக்கப்படும்.
இதனால் மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும். இன்னும் ஒரு வருடத்தில் இந்த ரயில் நிறுத்தம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணிகள் ஓவர்?: இன்னொரு பக்கம் 99 சதவிகித பணிகள் கிளாம்பாக்கத்தில் முடிந்துவிட்டன. அடுத்த 2 மாதங்களுக்குள் பேருந்து நிலையம் கண்டிப்பாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதற்கு முன் இந்த மாதமே சோதனை ஓட்டமாக 2-3 மாவட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 10 - 15 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு அடுத்த மாதம் முழுமையாக பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications